Aalaliloo

ஆழலிலோ ஆழலிலோ
நீ பாட மறந்திட கேட்டால் இவள்
கண்ணே என முத்தே என
நீ கொஞ்சாத உன் செல்ல துகள் இவள்

ஆழலிலோ ஆழலிலோ
நீ பாட மறந்திட கேட்டால் இவள்
சொல்லாமலே சொல்லாமலே
அம்மா என்றுதான் உன்னை அழைப்பவள்

நீ வீசிய புன்னகை
பின்னால் வருதோ
கேள்வி ஒன்றை நெஞ்சில் ஏந்தி
உன்னை பார்க்குதோ

காதல் அதை சொல்லவே
உயிர் வேண்டாம் எனவே
காத்திருந்தே பாத்திருந்தே
காதலை சொல்லுதோ

உன் கண்ணில் பட
உன் கைகள் தொட
முத்தங்கள் இட பார்கின்றதோ

இங்கேது வழி
இங்கேது மொழி
இல்லாத வலி
முள்ளாகுதோ
மௌனம் ஒன்று சொல்லாகுதோ

உன் போல் அவள் ஆவதே
உன்னை உணர
போதவில்லை என்றுணர்ந்து
உன் காற்றாகிறாள்

நீ ஓய்வென சாய்கையில்
உன் தூக்கம் அவளே
உந்தன் கனவில் தன்னை தேடி
பாதங்கள் தேய்கிறாள்

வண்ணங்கள் இல்லா உன் சின்ன நிலா
தன்னோட உலாவ வா என்றதோ
தீ நின்ற அகல் உன் வாழ்வின் நகல்
உன்னுள்ளேயே தானாய் விதைக்குதோ
மீண்டும் உன்னை உதைக்கிதோ



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, Sam C.s
Lyrics powered by www.musixmatch.com

Link