Puliya Kili Jeyicha

புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்

இந்தக் காதலில் யாரும் விழுந்துவிட்டால்
எழுந்திட மனசு இருக்குமா
எழுந்தாலும் மனசு இருக்குமா
நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்

காதல் ஒரு கண்ணாடி ஆனால் இந்த கண்ணாடி
தோன்றுவதை எல்லாம் காட்டுவது இல்லை

உள்ளத்தைப் பூட்டி வைத்தாலும் இரு கண்களில்
காட்டிக் கொடுக்கிறதே
உனக்கும் எனக்கும் முன்னாலே நம் நிழல்கள்
ஒன்றாய் நடக்கிறதே
ஓ கண்கள் பார்க்கும் போதிலே களவாடிப் போகுமே
காதலைக் கட்டிடக் கயிறுகள் ஏதுமில்லை

நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்

புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்

நீ தந்த மயிலிறகை நெடுங்காலம் வைத்திருந்தேன்
மீண்டும் அந்தக் காலம் மனதினில் ஓடும் ஆ ஆ ஆ

ஓ உன்னைக் காணும் முன்னாலே அடி என்னை
நானே வெறுத்து வந்தேன்
உன்னைக் கண்ட பின்னாலே நான் புல்லையும்
பூண்டையும் நேசிக்கிறேன்
ஓ தாய் தந்த சுவாசமும் தந்தை போல நெருக்கமும்
உன்னிரு தோள்களில் சாய்கையில் உணருகிறேன்

நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்

புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
ஆ புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்

இந்தக் காதலில் யாரும் விழுந்துவிட்டால்
எழுந்திட மனசு இருக்குமா
எழுந்தாலும் மனசு இருக்குமா
நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
நான் உன்னைப் பார்க்கிறேன்

Credits
Writer(s): D. Imman, K.s. Selvaraj
Lyrics powered by www.musixmatch.com

Link