Nandri Solginren

கொஞ்சிப் பேசியதேதும்
நினைவில் இல்லையடி
கோபம் கொண்டது ஏதும்
மறக்கவில்லையடி

கொஞ்சிப் பேசியதேதும்
நினைவில் இல்லையடி
கோபம் கொண்டது ஏதும்
மறக்கவில்லையடி

எத்தனை முத்தம் தந்தாய்?
எண்ணியதில்லையடி
எத்தனை முறை தண்டித்தாய்
மறக்கவில்லையடி

நேற்றின் கண்ணீரோ
எந்தன் கண்ணோடு
வெற்றி நான் கொண்டேன்
வேர்கள் உன்னோடு

நேர்மை கற்பித்தாய்
முன்னே செல்கின்றேன்
ஈர கண்ணோடு
நன்றி சொல்கின்றேன்

என் உளறல் நீ மகிழ்ந்தாயா
நினைவில்லை
எந்தன் முதல் பொய்யை கண்டறிந்தாய்
மறக்கவில்லை

யார் முன்னும் என்னை
விட்டுக் கொடுத்ததில்லையடி
கனவுகள் தேடும்போது
தடுத்ததில்லையடி

வெற்றிகள் நான் பெறும்போது
அணைத்ததில்லையடி



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, Ramesh Thamilmani
Lyrics powered by www.musixmatch.com

Link