Ennai Enna Seithai

பெ: என்னை என்ன செய்தாய் வேங்குழலே

என்னை என்ன செய்தாய் வேங்குழலே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லயே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லயே
நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்
இந்த இள மனம் இயங்கிடவே
என்னை என்ன செய்தாய் வேங்குழலே

என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்... ஏ.ஏ
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்னுள் என்னை கண்டு நல்லின்பம் படைத்து நின்றேன்

என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்னுள் என்னை கண்டு நல்லின்பம் படைத்து நின்றேன்
வேறு ஞாபகங்கள் வருடாமல் நானிருந்தேன்
வேறு ஞாபகங்கள் வருடாமல் நானிருந்தேன்
யாரோ...? அவன் யாரோ...?
யாரோ... அவன் யாரோ...
யமுனா நதி தீரத்தில் அமர்ந்தோரு இசை கலையால்
என்னை என்ன செய்தாய் வேங்குழலே

ஆ: மழை கம்பி குத்தாமல் இருக்க
குடை கம்பியாய் ஒதுங்கினேன்
குடை அல்ல அது உன் குரல் அருவி குற்றாலம்

ஆ: கானம் கேட்க கண் மூட போய்
காணாமலே போனேன் நான்

ஆ: விட்டு கூடு பாய்ந்திருப்பேனோ என
தட்டு தடுமாரி தேடி
காதுகளால் இரைந்திருக்கும்
உன் கால் அடிவாரம் வந்து கிடந்தேன்

பெ: மூங்கில் போலே விளைந்தொரு மங்கை இருக்க

ஆ: அடடா அ தாளமிடும் கைக்கும்
தட்டு படும் உன் தொடைகும் இடையே நான்
சிக்கிகொண்டிருப்பதை கண்டுகொண்டேன்

பெ: மூங்கில் போலே விளைந்தொரு மங்கை இருக்க
துளைக்கும் வண்டாய் மனதை துளைத்தாய் நீயே

ஆ: ஏனோ காது கொடுக்க வந்தவன்
வெறும் காதோடு போகிறேன் போ

பெ: தூங்கும் யாழாய் தனிமையில் தோகை இருக்க
ஆஆ...
மீட்டும் விரலாய் நரம்பினில் நடந்தாய் நீயே
வண்ண மலர் உண்டு...
வெள்ளி அலை உண்டு...
வருடிடும் காற்றென உலவ போ
வண்ண மலர் உண்டு...
வெள்ளி அலை உண்டு...
வருடிடும் காற்றென உலவ போ
பச்சை கொடியொன்று
பசும் புல் மடியுண்டு
நீர் துளியை போல தழுவ போ
இசைகள் நுழையாத செவிகள் பல உண்டு
உனது திறமைகள் அங்கு பலிக்குமோ
நீயும் விளையாட நூறு இடம் உண்டு
அனுதினம் வருத்துதல் நியாயமோ

என்னை என்ன செய்தாய் வேங்குழலே
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லயே
நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்
இந்த இள மனம் இயங்கிடவே
எ வேங்குழலே வேங்குழலே



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Pa. Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link