Un Punagai Pothumadi (From "Pass Mark")

உன் புன்னகை போதுமடி, சில பூக்களும் பூக்குமடி

உன் பார்வைகள் போதுமடி, பொன் பௌர்ணமி தோன்றுமடி

ஒரு காவிய தூரிகை, தீட்டிய மேனகை, உனது மேனி வடிவம்
என் கனவில் வந்து உலவும்

மணமாலை நீ கொள்ள போராடினேன், மகராணி உனக்காக வாதாடினேன்
ஏன் இந்த வாழ்வென்று திண்டாடினேன், நீ வந்த பின்னாலே நிறம் மாறினேன்
எப்போது அல்லி பூக்குமோ, நீர் அறியக்கூடும்
எப்போது காதல் பூக்குமோ, யார் அறியக்கூடும்
உரிமைத் தலைவா, உயிரைத் தரவா
இனி நான் ஒரு காகிதம், நீ அதில் காவியம், எழுதிக் கொள்க இறைவா

உன் புன்னகை போதுமடி, சில பூக்களும் பூக்குமடி
உன் புன்னகை போதுமடி, சில பூக்களும் பூக்குமடி
உன் மார்பில் கண் மூடும் வரம் கேட்கிறேன்
உன் மூச்சில் நான் கொஞ்சம் உயிர் வாழ்கிறேன்
மணமாலை நாம் சூட நாள் பார்க்கிறேன்
மாராப்பு களையாமல் தோள் சேர்க்கிறேன்

இப்போது தத்தளிக்கிறாள், இந்த மகராணி
எப்போது பள்ளி கொள்ளுமோ, இளைய மலர் மேனி
பருவக் கனியே, பன்னீர் குளமே
நாம் காட்சிகள் காண்பதும், மோட்சங்கள் போவதும், இன்னும் இரண்டு தினமே

உன் புன்னகை போதுமடி, சில பூக்களும் பூக்குமடி
உன் புன்னகை போதுமடி, சில பூக்களும் பூக்குமடி
உன் பார்வைகள் போதுமடி, பொன் பௌர்ணமி தோன்றுமடி
உன் பார்வைகள் போதுமடி, பொன் பௌர்ணமி தோன்றுமடி
ஒரு காவிய தூரிகை, தீட்டிய மேனகை, உனது மேனி வடிவம்
என் கனவில் வந்து உலவும்

உன் புன்னகை போதுமடி, சில பூக்களும் பூக்குமடி
உன் புன்னகை போதுமடி, சில பூக்களும் பூக்குமடி

Credits
Writer(s): Deva, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link