Innisai Paadivarum (From Thullatha Manamum Thullum") (Male Vocals)

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவாி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

கண் இல்லையென்றாலோ நிறம் பாா்க்கமுடியாது
நிறம் பாா்க்கும் உன் கண்ணை நீ பாா்க்கமுடியாது
குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா
உணா்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா

கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீா்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சியில்தான் கற்பனை வளா்ந்துவிடும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

உயிா் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே
உயிா் என்ன பொருள் என்று அலைபாய்ந்து திாியாதே
வாழ்க்கையின் வோ்களோ
மிக ரகசியமானது
ரகசியம் காண்பதே
நம் அவசியமானது

தேடல் உள்ள உயிா்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவாி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

Credits
Writer(s): S. Rajkumar, Vairamuthu Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link