Karugamani

கருகமணி கழுத்துமேலதான்...
மஞ்சக்கொடி நீயும் கட்ட
நான் ஏங்குறேன்
நல்ல நாள் பார்க்குறேன்
கருகமணி கழுத்துமேலதான்...
மஞ்சக்கொடி நீயும் கட்ட
நான் ஏங்குறேன்
நல்ல நாள் பார்க்குறேன்
மேளம் கொட்டுர சத்தம்
அட கேக்கவேணும் ஊரு
வேஷம் போட வேணாம்
நீயும் என்ன வந்து சேரு
மஞ்சக்குளிக்கும் போது
இந்த மாமன் நெனப்பு வருது
இந்த சிறுக்கி பொழப்ப கெடுத்தவனே
சீக்கிரம் வாய்யா
கருகமணி கழுத்துமேலதான்...
தென்னமரக்கெல மேல
ஊஞ்சல் கட்டி நாம் ஆடலாம்
எந்த பொய்யும் அழகாகும் நீ பேசுனா
வெல்லக்கட்டி கசக்குதய்யா
ஒன்னத்தொரும் நிமிஷத்துல
எந்த பொய்யும் உண்மையாகும்
நான் பேசுனா
கண்ணாடி வளவியெல்லாம்
கலகலனு சிரிக்குதய்யா
அன்னாடம் ஏம் பொழப்பு
தவியாத்தான் தவிக்கிதைய்யா
நெலம புரிஞ்சு ஒடனே
நீ நெருப்ப அணைக்க வாய்யா
நெறிஞ்சி முள்ள நீ வெலக்கி
பஞ்சு மெத்தை தாய்யா
கருகமணி கழுத்துமேலதான் ...

இசை

வட்ட நெல ராத்திரியில்
வலம்வருதே வீட்டுபக்கம்
அந்த நேரம் உருவம் நெழலடுது
கிட்ட வந்து நான் புடிக்க
முத்தம் தந்து நீ ரசிக்க
அந்த நேரம் கனவுதான்னு நெசமாகுது
மருதானி போட்ட கை மாமனயும் புடிக்கனுமே
செம்பருத்தி பூ இதழ
மாமன் கண்ணு ரசிக்கனுமே
பீப்பி பீப்பி பிப்பி பிப்பி
பிப்பி டும் டும்டும் டும்டும் டும்டும்
பொறந்த புள்ளக்கு பேரு வைக்க
நீங்களும் வாங்க

கருகமணி கழுத்துமேலதான்...
மஞ்சக்கொடி நீயும் கட்ட
நான் ஏங்குறேன்
நல்ல நாள் பார்க்குறேன்
கருகமணி கழுத்துமேலதான்...
மஞ்சக்கொடி நீயும் கட்ட
நான் ஏங்குறேன்
நல்ல நாள் பார்க்குறேன்
மேளம் கொட்டுர சத்தம்
அட கேக்கவேணும் ஊரு
வேஷம் போட வேணாம்
நீயும் என்ன வந்து சேரு
மஞ்சக்குளிக்கும் போது
இந்த மாமன் நெனப்பு வருது
இந்த சிறுக்கி பொழப்ப கெடுத்தவனே
சீக்கிரம் வாய்யா
கருகமணி கழுத்துமேலதான்...

நன்றி



Credits
Writer(s): Daniel, Rasi Mani Vasakan
Lyrics powered by www.musixmatch.com

Link