Um Saayalile

பெண்: ஹ்ம்ம்ம்... ம்ம்ம்...
ம்ம்.ம்ம்ம்ம்... ம்ம்ம்...

ஆண்: கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

ஆண்: கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

ஆண்: கண் கேட்கும்... கனா
நெஞ்சுக்குள்... வினா

பெண்: ஹ்ம்ம் உன் நகம் வர
சொல் முகவரி
உன் உடல் வர
ஏன் அனுமதி

பெண்: தீராத நேரம்
உன் கூட போதும்
மாயாத நாள் மட்டும்
நாம் வாழ வேணும்
தீராத ஆசை
ஓயாமல் தோணும்
நாள் நேரம் பாராமல்
தோள் சாய வேணும்

ஆண்: ஓ சாயாலி
ஓ சாயாலி
என்னுள் நீ பூகம்பம்
செய்தாயடி

ஆண்: ஓ சாயாலி
ஓ சாயாலி
என்னை நீ வேரோடு
பேத்தாயடி

குழு: கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
ஆண்: என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

குழு: கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
பெண்: என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

பெண்: ஆழி போல் சூழ்ந்திடும்
அன்பிலான வீடு இது
ஓர் உயிர் போலவே
நாங்கள் வாழும் கூடு இது

ஆண்: ஆழி போல் சூழ்ந்திடும்
அன்பிலான வீடு இது
ஓர் உயிர் போலவே
நாங்கள் வாழும் கூடு இது

பெண்: ஓ தூரத்து வானத்தில்
மழை போல சந்தோசம்
என்றும் எங்கள் வீட்டுக்குள் கொட்டும்

ஆண்: பள்ளங்கள் இல்லாத
பாசங்கள் கொண்டு இங்கு
காற்றும் இங்கே தாலாட்டு மீட்கும்

பெண்: தேவைகள் வேற்றில்லை
நாங்களும் வாழ்ந்திட
ஆண்: அன்பினில் வாழ்கிறோம்
இன்பம் கூடிட

பெண்: நான் சாயாலி
நான் சாயாலி
என்னுள்ளே பூகம்பம்
செய்தாயே நீ

பெண்: நான் சாயாலி
நான் சாயாலி
என்னை நீ வேரோடு
பேத்தாயே நீ

ஆண்: நீ இல்லா நாழிகை
தீயில் வேகும் ஓர் நிலை
கூடவே நீ வர
கூறு நீயும் யோசனை

பெண்: தேய் நிலா ஆகிறேன்
தூரம் நீயும் போகையில்
வா உலா போகலாம்
கூடல் கூடும் வேலையில்

ஆண்: என் கண்ணின் சாரத்தில்
உன் பிம்ப மீறல்கள்
ஏனோ என்னை
தோற்பிக்க தானோ

பெண்: கண்ணாடி நெஞ்சம் மேல்
உன் அன்பின் பாரங்கள்
ஏனோ என் நெஞ்சை
சில்லாக்க தானோ

ஆண்: ஏன் இனி தாமதம்
வா உடன் வாழ்ந்திட

பெண்: நாட்களும் தீரும்முன்
சேர்வோம் வாழ்ந்திட

பெண்: நான் சாயாலி
நான் சாயாலி
என்னுள்ளே பூகம்பம்
செய்தாயே நீ

பெண்: நான் சாயாலி
நான் சாயாலி
என்னை நீ வேரோடு
பேத்தாயே நீ

பெண்: ஆஅ... ஆஅ... ஆஅ... ஆஅ...
ஆண்: கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

ஆண்: கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

ஆண்: சாயாலி
சாயாலி
ஓ சாயாலி
ஓ சாயாலி

ஆண்: சாயாலி
சாயாலி
ஓ சாயாலி
ஓ சாயாலி

ஆண்: சாயாலி
சாயாலி
ஓ சாயாலி
ஓ சாயாலி
வருவேனே என் சாயாலி



Credits
Writer(s): Rufus, Mohen S Abraham
Lyrics powered by www.musixmatch.com

Link