Pattukutty Neethan (From "Raja Ranguski")

பட்டுக்குட்டி நீதான்
என் பட்டுக்குட்டி நீதான்
இருபது வயதானவளே
இதயத்தை தொட்டுப்போனவளே
இவள் முகம் ஓர் வானவில்லே
இதற்கு மேல் சொல்ல தோனவில்லை
தினசரி உன்னைப்பார்த்திடவே
வரம் கொடு என் தேவதையே
எனக்கென ஓர் ஊருமில்லை
உன்னை விட்டால் ஓர் பேருமில்லை
பட்டுக்குட்டி நீதான்
பார்வையால் என்னைத் தாக்குறடி
என் பட்டுக்குட்டி நீதான்
பதுங்கியே நெஞ்சில் பாயுறடி
விழிகளால் என்னை நீ அழைத்தால்
விரும்பியே வந்து பூ கொடுப்பேன்
திரும்பியே கொஞ்சம் நீ சிரித்தால்
திருவிழா தானே

தொடுவதும் சிரிப்பதும் அடிக்கடி
தொடருமா தொடருமா
இமைகளால் இழுக்கிறாள் இவனை நீதான் பெண்ணே
கண்ணாடியை பார்த்தால் தெரிவதும் நீயே
கண்மூடியே பார்த்தால் கனவிலும் நீயே
தொலைவிலே உன் முகம் பார்த்து
தூண்டிலை போடும் காதலன் நானே
எதிரிலே கடவுள் வந்தால்
உன்னை மட்டும் தான் நான் காண்பேனே
பட்டுக்குட்டி நீதான்
உன் நடையிலே உயிர் துடிக்குதடி
என் பட்டுக்குட்டி நீதான்
உயிர் பிழைக்கவே ஒரு வழி சொல்லடி
உன்னைவிட வேரு யாருமில்லை
உன்னைவிட்டு போக தோனவில்லை
காதலின் சுமை பாரமில்லை
பதில் சொல்லு நாளை



Credits
Writer(s): Yuvan Raja, Kabilan Kabilan
Lyrics powered by www.musixmatch.com

Link