Unnai Sarandaithen

உன்னை சரணடைந்தேன் உன்னுள்ளே நான் பிறந்தேன்
என்னில் உறைந்திருந்தேன் உன்னுள்ளே நான் கரைந்தேன்

கண்கள் இமையை விட்டு உன்னையே நம்பி நிற்க
ஸ்வாசம் காற்றை விட்டு உன்னையே தேடி செல்ல

தாயாக மாறிப் போனாயே வேராக தாங்கி நின்றாயே
அயராது ஓடும் நெஞ்சின் இசையாக நீ இருக்க
கண்ணீர் ஊறும் ஆழத்துல காலமெல்லாம் உப்ப போல
உந்தன் உள்ளே நான் இருப்பேனே

உன்னை சரணடைந்தேன் உன்னுள்ளே நான் பிறந்தேன்

தினம்தோறும் சாமிகிட்ட தீராத ஆயுள் கேட்பேன்
நீ பார்க்கும் பார்வை போல பூவெல்லாம் பூக்க கேட்பேன்

நீ நடக்கும் நிலத்தினிலும் நிம்மதி வளர்த்திடுவேன்
நீ அருந்தும் நீரினிலும் தாய்மையை தந்திடுவேன்

உன் உலகத்தின் மீது நான் மழை ஆகுவேன்
உன் விருப்பங்கள் மீது நான் நதி ஆகுவேன்

உன்னை சரணடைந்தேன் உன்னுள்ளே நான் பிறந்தேன்
என்னில் உறைந்திருந்தேன் உன்னுள்ளே நான் கரைந்தேன்

காதல் என்ற சொல்லில் காதலே இல்லை என்பேன்
வாழும் வாழ்க்கை இதில் காதலாய் வாழ்வோம் என்பேன்

சொந்தங்கள் யாவும் ஆனாயே சோகங்கள் ஆற்றி விட்டாயே
அடைகாக்கும் தாய் குருவி சிறகாகி நீ அணைக்க
முட்டை கூட்டின் ஓடுடைத்து முட்டி மோதும் குஞ்சை போல
தினமும் புதிதாய் நான் பிறப்பேனே



Credits
Writer(s): Thenmozhi, Murali Sabesh
Lyrics powered by www.musixmatch.com

Link