Azhage Azhage

அழகே அழகே (ஏ-ஏ)
உருகும் மெழுகே (ஹா-ஆ)
அழகே அழகே உருகும் மெழுகே
உன் பெயர் என்னம்மா

அடடா உனக்குள் இருப்பவள் தானோ
பாரதி கண்ணம்மா
கண்ணம்மா எங்கள் கண்ணம்மா
உன் கண்களில் என்ன ஈரமா
சோகமே உந்தன் சொந்தமா
எங்கள் இதயமே அதனை தாங்குமா-ஆ-ஆ

அழகே அழகே உருகும் மெழுகே
உன் பெயர் என்னம்மா

பச்சை குழந்தை போலே இங்கே
துவண்டு போனது யாரம்மா
இந்த அன்னை அவளின் கண்களிலே
வங்க கடலே ஏனம்மா
சொல்லம்மா

சிலந்தி பின்னும் வலைகள் எல்லாம்
சிறைகள் ஆகுமா
இந்த துயரம் நாளை மறையும் மறையும்
சின்ன கண்ணம்மா
எந்த இலையும் உதிரும் மீண்டும் வளரும்
இயற்கை நியதி பாரடி
இது வசந்தம் வந்து வாசல் மேலே
கோலம் போடும் நாளடி

எந்த கை போனாலும் நம்பிக்கை உண்டென்று
உறுதி கொள்ளடி கிளியே
புது உலகம் காணடி வெளியே
உறுதி கொள்ளடி கிளியே
புது உலகம் காணடி வெளியே



Credits
Writer(s): Joey Alan Michel Richardson, Kiruthiya Kiruthiya
Lyrics powered by www.musixmatch.com

Link