Mazhai Pesum

சிறு சலனமில்லா... ஓர் ஓடையாய்
இருந்த என்னில் ஏன் நீ
சொல் வீசினாயோ?
நீ சொல் வீசினாயோ?

மழை பேசும் வானம் நீயா?
மணம் வீசும் பூமி நீயா?
அலை பேசும் வார்த்தை நீயா?
தலை கோதும் மேகம் நீயா?
தலை கால் புரியா
நிலையை கொடுத்தாய்!
தொலை வான் நிலவாய்
அழைத்தேன் உதித்தாய்!

மழை பேசும் வானம் நீயா?
மணம் வீசும் பூமி நீயா?
அலை பேசும் வார்த்தை நீயா?
தலை கோதும் மேகம் நீயா?

கரு அருவியை போலே
கூந்தலினைக் கொண்டாய்
அதில் நனைந்துவிட்டேன்!

பெருங்கடலலினைப் போலே
கண்களை நீ கொண்டாய்
அதில் தொலைந்துவிட்டேன்!

உந்தன் புன்னகை கொஞ்சமாய் கிள்ளி
அழகை கொஞ்சமாய் அள்ளி
தோட்டத்திலே விதைத்தேனே!

உந்தன் பிம்பத்தை கைகளில் அள்ளி
இன்பத்தில் இன்பத்தில் துள்ளி
நெஞ்சுக்குள்ளே புதைத்தேனே!

தலை கால் புரியா
நிலையை கொடுத்தாய்!
தொலை வான் நிலவாய்
அழைத்தேன் உதித்தாய்!

மறு பிறவியிலேனும்
உனை தழுவிடும் காற்றாய்
பிறந்திட முயல்வேன்!

ஒரு நொடித் துகளேனும்
உன் சுவாசம் என்றாகி
உயிர் தொட முயல்வேன்!

உந்தன் கண்களை இமைக்கும் நொடி
நான் கண்ணில் இல்லையே என்றே
ஊடல் கொஞ்சம் அணிந்தேனே

உந்தன் வார்த்தைகள் நான்கைந்தைக் கொண்டு
மௌனத்தின் கின்னத்தில் மொண்டு
தாகம் கொஞ்சம் தணிந்தேனே!

தலை கால் புரியா
நிலையை கொடுத்தாய்!
தொலை வான் நிலவாய்
அழைத்தேன் உதித்தாய்!

மழை பேசும் வானம் நீயா?
மணம் வீசும் பூமி நீயா?
அலை பேசும் வார்த்தை நீயா?
தலை கோதும் மேகம் நீயா?



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, Srinivas
Lyrics powered by www.musixmatch.com

Link