Chinna Roja

சின்ன ரோஜா சின்ன ரோஜா முள்ளில்லாத சின்ன ரோஜா

சொல்லு ராஜா சொல்லு ராஜா சொந்தம் நீயும் சொல்லு ராஜா
தாயும் இல்லை நான் தந்தை இல்லை ஒன்றாக பிறந்த பந்தம் இல்லை
நண்பன் இல்லை நீ பிள்ளை இல்லை என்றாலும் அன்பில் பஞ்சம் இல்லை
நானும் நீயும் சேரும் உறவின் பேரும் என்னடா

என் மடியில் நீ உறங்கு உன் மடியில் தென்றல் வந்து சுகமாய் உறங்கும்
என் கனவை நீயும் காண உன் கனவை நானும் காண உறவும் வளரும்
கண்ணா உந்தன் சிரிப்பில் தானே ஆஆ ஆஆஆஆ
கண்ணா உந்தன் சிரிப்பில் தானே எந்தன் மனம் தொலைத்தேனே
உந்தன் வாழ்க்கை வெளிச்சம் பெறவே என்றும் நானே மெழுகாவேன்
உன்னை தோளில் சாய்த்து ஆட நான் ஆரிராரோ பாட
வரும் ஜென்மம் எல்லாம் உந்தன் தாய் ஆகுவேனே

சின்ன ரோஜா சின்ன ரோஜா முள்ளில்லாத சின்ன ரோஜா
சொல்லு ராஜா சொல்லு ராஜா சொந்தம் நீயும் சொல்லு ராஜா
வானம் வெகு தூரமில்லை வெண்ணிலாவில் ஊஞ்சல் கட்டி ஆடலாம் வா
நான் இருக்க துன்பம் இல்லை என்னுயிராய் உன்னை நானும் காப்பேன் வா
உன்னை சோகம் தீண்ட பார்த்தால்
உன்னை சோகம் தீண்ட பார்த்தால் எந்தன் கண்கள் தீ மூட்டும்
உன்னை சுகம் தேடி வந்தால் எந்தன் கரங்கள் பூ தூவும்
நான் கருவில் செய்த கனவே
நீ எனக்கே கிடைத்த வரமே
வரும் ஜென்மம் எல்லாம் உந்தன் தாய் ஆகுவேனே

சின்ன ரோஜா சின்ன ரோஜா முள்ளில்லாத சின்ன ரோஜா
சொல்லு ராஜா சொல்லு ராஜா சொந்தம் நீயும் சொல்லு ராஜா
தாயும் இல்லை நான் தந்தை இல்லை ஒன்றாக பிறந்த பந்தம் இல்லை
நண்பன் இல்லை நீ பிள்ளை இல்லை என்றாலும் அன்பில் பஞ்சம் இல்லை
நானும் நீயும் சேரும் உறவின் பேரும் என்னடா

Credits
Writer(s): Deva, Palani Bharathi Palaniappan
Lyrics powered by www.musixmatch.com

Link