Pacha Manna Thottu

பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு
நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு
பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு
நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு

லட்சியத்தை சேரும் வரை வேறென்ன பேச்சு
ஒற்றுமையினால் இந்த வெற்றி வந்தது
ஊரு உலகம் உன்ன சுற்றி வந்தது

பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு
நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு

விதச்ச விதை நெல்லு முளைக்கிற நேரம்
மனித மனங்களில் உண்டாச்சு ஈரம்
பிரிந்த மனிதர்கள் சேர்கின்ற நேரம்
பிளந்த பாறைகள் ஊற்றாக மாறும்

கழுத்தை அறுத்தவர் கரம் தடுப்போம்
கதிரை அறுத்திட வழி வகுத்தோம்
மனசுக்கு வைத்தியம் நீ பார்க்க வந்தாய்

சொல்லி கொடுக்கும் காலம் புத்தம் புதுசு
அள்ளி கொடுக்கும் உந்தன் வள்ளல் மனசு (ஹ...)

பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு
நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு

வெள்ளி நிலவினை வீட்டுக்கு அழைத்து
மின்னும் விளக்குகள் ஏற்றி வச்சாச்சு
கருவில் இருக்கிற குழந்தையும் நாள
தெருவில் நடக்கிற உரிமை உண்டாச்சு

கால மழை வர குரல் கொடுப்போம்
கண்ணில் மழை எனில் குடை பிடிப்போம்

சூரிய தீபம் என்று நீ வந்ததாலே
சந்திரனுக்கு இப்போ என்ன வயசு
சந்தித்தது உண்டா உங்க தங்க மனசு

பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு
நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு
லட்சியத்தை சேரும் வரை வேறென்ன பேச்சு

ஒற்றுமையினால் இந்த வெற்றி வந்தது
ஊரு உலகம் உன்ன சுற்றி வந்தது



Credits
Writer(s): A R Rahman, Mu Metha
Lyrics powered by www.musixmatch.com

Link