Iraivanai Thedi

இறைவனை தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
இறைவனை தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனது இருப்பவன் தானே
மனிதன் அவனை தேடுகிறார்

இந்த உலகத்தில் அவன் கிடைப்பானோ
எந்த உலகத்திலே இருப்பானோ
இந்த உலகத்தில் அவன் கிடைப்பானோ
எந்த உலகத்திலே இருப்பானோ
அவனை தேடுதல் போலே
இவர் ஏன் தன்னையே தேடுகிறார்
தன்னையே தேடி தேடி இவர்கள்
அவனை மறந்துவிட்டார்

இறைவனை தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனது இருப்பவன் தானே
மனிதன் அவனை தேடுகிறார்

பொன்னும் மணியும் பூட்டி வைத்தவன்
இன்னும் கோடி தேட
கோடி கோடி குவித்து வைத்தவன்
கோட்டை கொடியை தேட

ஆசை தீர ஆடி பார்த்தவன்
அடுத்த உயரம் தேட
உச்சம் தன்னை தொட்டு நிற்பவன்
மிச்ச புகழை தேட

தேடலே இந்த வாழ்க்கையின்
தேவையாய் ஆனதே
ஆயுளின் மொத்த காலமும்
தேடியே போனதே

அந்த இறைவன் இறைவன் பூமிக்கு வந்தான்
இதயம் ஒன்றை தேடி
அது கிடைக்கவில்லை போடி

இறைவனை தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனது இருப்பவன் தானே
மனிதன் அவனை தேடுகிறார்

வாட்டம் இன்றி காற்றை போலவே
வாழும் மனிதம் எங்கே
ஆட்டம் போட்டு கூட்டம் கூட்டியே
ஆடும் மனிதன் இங்கே

கொஞ்சம் மனிதம் நெஞ்சில் வைத்துதான்
மிஞ்சும் மனிதன் எங்கே
நெஞ்சம் எங்கும் வஞ்சம் சேர்த்து தான்
எஞ்சும் மனிதன் இங்கே

யாருமே இல்லை என்றுதான்
யாருமே இல்லையே
கருவிலே தோன்றும் உயிரெல்லாம்
கடவுளின் பிள்ளையே

அட மனிதா மனிதா
அலைச்சலை ஒளித்து
அமைதி ஒன்றை தேடு
அது கடவுள் வரைந்த கோடு

இறைவனை தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனது இருப்பவன் தானே
மனிதன் அவனை தேடுகிறார்

இந்த உலகத்தில் அவன் கிடைப்பனோ
எந்த உலகத்திலே இருப்பானோ
இந்த உலகத்தில் அவன் கிடைப்பனோ
எந்த உலகத்திலே இருப்பானோ
அவனை தேடுதல் போலே
இவர் ஏன் தன்னையே தேடுகிறார்
தன்னையே தேடி தேடி இவர்கள்
அவனை மறந்துவிட்டார்

இறைவனை தேடும் உலகத்தில்
இவரோ மனிதனை தேடுகிறார்
மனிதனை தேடுகிறார்
மனிதனை தேடுகிறார்



Credits
Writer(s): Ilaiyaraaja, Pa Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link