Paadi Thirintha

ஓ ஓஹோ
ஓ ஓஹோ
பாடித் திரிந்த எந்தன் தோழி
ஓ பாடும் குயிலுக்கென்ன வேலி
பாடித் திரிந்த எந்தன் தோழி
ஓ பாடும் குயிலுக்கென்ன வேலி

கதை பேசும் ஊருக்குள்ளே
விடுகதையாய் நின்றாயா
உறவொன்றை தவறாய்ப் பேசும்
பரிதாபம் கண்டாயா
கண்ணே மணியே வருந்தாதே

பாடித் திரிந்த எந்தன் தோழி
ஓ பாடும் குயிலுக்கென்ன வேலி

அந்த வான் நிலவில்
ஒரு கலங்கம் சொல்வார்
குற்றம் உள்ள கண்ணில்
குறையாய்த் தெரியும்

எதிர்க் காற்றினிலே
மண்ணைத் தூற்றிச் செல்வார்
தூற்றுபவர் மேலே கறைதான் படியும்

கண்ணீர் ஆற்றில் நீந்தும் மீனே மீனே
உண்மைச் சொன்னால் அது வீணே வீணே
என் ஜென்மமே உனக்காகத்தான்
வரும் ஜென்மங்கள் உன்னோடுதான்

பாடித் திரிந்த எந்தன் தோழி
ஓ பாடும் குயிலுக்கென்ன வேலி

எதிர்க் காலம் உண்டு
நல்ல வாழ்வும் உண்டு
மின்னும் உந்தன் கண்கள்
சொல்லுதே கண்மணி

பழி பாவத்துக்கு
ஒரு தீர்ப்பும் உண்டு
தர்ம தேவன் சொன்னான்
காதிலே கண்மணி

தூற்றும் ஊரே உன்னைப்
போற்றும் போற்றும்
அன்பே அன்பின் விளக்கு
ஏற்றும் ஏற்றும்
வரும் நாளெல்லாம் திருநாளம்மா
இனி பூபாளம் நீதானம்மா

பாடித் திரிந்த எந்தன் தோழி
ஓ பாடும் குயிலுக்கென்ன வேலி

கதை பேசும் ஊருக்குள்ளே
விடுகதையாய் நின்றாயா
உறவொன்றை தவறாய்ப் பேசும்
பரிதாபம் கண்டாயா
கண்ணே மணியே வருந்தாதே

பாடித் திரிந்த எந்தன் தோழி
ஓ பாடும் குயிலுக்கென்ன வேலி
ம்ஹ்ஹீம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்



Credits
Writer(s): Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link