Kanne Unna

கண்ணே உன்ன காணாம நான் கவி பாடுறேன்
நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தெனம் வாடுறேன்

மதுர மல்லி வாசம்
உன்ன பார்த்தாலே பேசும்
உன் கொலுசு சத்தம் கேட்டு
அந்த கோயில் மணி ஆடும்

கண்ணே உன்ன காணாம நான் கவி பாடுறேன்
நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தெனம் வாடுறேன்

ஆத்துக்குள்ள ஊத்துத்தோண்டி விளையாடினோம்
கூட்டாஞ்சோறு ஆக்கி நாம பசியாரினோம்
பள்ளிக்கூட பாடம் மறந்து அடி வாங்கினோம்
அம்மா அப்பா பேரச் சொல்லி கத பேசினோம்
காலம் போட்ட கோலம் அழிஞ்சு தேச மாறினோம்

கண்ணே உன்ன காணாம நான் கவி பாடுறேன்
நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தெனம் வாடுறேன்

நோங்குரோத வண்டி ஓட்டி நாம் ஓடினோம்
மண் குதுர மேல நின்னு சதிலாடினோம்
அந்த நாளு நெஞ்சுக்குள்ள அலைபாயுதே
நஞ்சு போல ஞாபகங்கள் மனமாலுதே
பாதையெல்லாம் பாத்து பாத்து வெளிவாடுதே

கண்ணே உன்ன காணாம நான் கவி பாடுறேன்
நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தெனம் வாடுறேன்

வெள்ளருக்கு வெட்டி வந்து பேயோட்டினோம்
செங்கல் மேல பான வச்சு தீ மூட்டினோம்
அந்த நாளு நெஞ்சுக்குள்ள கடப்போடுதே
எந்த நாளு நீயு வருவ வெடத்தெடுதே
ஆசையெல்லாம் இதையே கேட்டு தெனம் வாடுதே

கண்ணே உன்ன காணாம நான் கவி பாடுறேன்
நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தெனம் வாடுறேன்

மதுர மல்லி வாசம்
உன்ன பார்த்தாலே பேசும்
உன் கொலுசு சத்தம் கேட்டு
அந்த கோயில் மணி ஆடும்

கண்ணே உன்ன காணாம நான் கவி பாடுறேன்
நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தெனம் வாடுறேன்



Credits
Writer(s): Ilaya Raja, Samraj Samraj
Lyrics powered by www.musixmatch.com

Link