Epadiyamma

எப்படியம்மா மறக்க முடியும்
இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்
மறைந்து போனதை

எப்படியம்மா மறக்க முடியும்
இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்
மறைந்து போனதை

எப்படியம்மா
ஆ ஆ ஆ

இப்படி எல்லாம் நடக்குமென்று
தெரிந்திருந்தாலே
ஆ ஆ ஆ ஆ
இப்படி எல்லாம் நடக்குமென்று
தெரிந்திருந்தாலே
அந்த இறைவனிடம்
நாங்களெல்லாம் கேட்டிருப்போமே

நிச்சயமில்லா வாழ்க்கையிலே
தனி தங்கமாக
நிச்சயமில்லா வாழ்க்கையிலே
தனி தங்கமாக
இந்த ஊரினிலே வாழ்ந்து வந்தார்
உயர் தரமாக
இந்த ஊரினிலே வாழ்ந்து வந்தார்
உயர் தரமாக

இதை எப்படியம்மா
மறக்க முடியும்
இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்
மறைந்து போனதை

எப்படியம்மா
ஆ ஆ ஆ
மாலையிட்ட கரும்பாக
கசைந்தார் ஐயா
ஆ ஆ ஆ
மாலையிட்ட கரும்பாக
கசைந்தார் ஐயா
நீ மாலையிட்ட மனைவி
இன்று கலங்குறார் ஐயா

மன்னனில்லா மங்கையர்க்கு
மஞ்சள் சொந்தமா
மன்னனில்லா மங்கையர்க்கு
மஞ்சள் சொந்தமா

அன்பு கணவரில்லா பெண்மணிக்கு
பூவும் சொந்தமா
அன்பு கணவரில்லா பெண்மணிக்கு
பொட்டும் சொந்தமா

இதை எப்படியம்மா
மறக்க முடியும்
இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்
மறைந்து போனதை

எப்படியம்மா
ஆ ஆ ஆ

நிலவில்லாமல் நீளவானில்
வெளிச்சம் தோன்றுமா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நிலவில்லாமல் நீளவானில்
வெளிச்சம் தோன்றுமா
மாவீரன் நீயில்லாத
குடும்பத்திலே நிம்மதி கிடைக்குமா

உன்னை பிரிந்த
சொந்தங்களும்
கலங்கினார் ஐயா
உன்னை பிரிந்த சொந்தங்களும்
கலங்கினார் ஐயா

உன்னை பறிகொடுத்த நண்பரெல்லாம்
வாடினார் ஐயா
உன்னை பறிகொடுத்த நண்பரெல்லாம்
வாடினார் ஐயா

இதை எப்படியம்மா
மறக்க முடியும்
இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்
மறைந்து போனதை

எப்படியம்மா மறக்க முடியும்
இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன்
மறைந்ததே தாங்க முடியலே



Credits
Writer(s): Shenoy Nagar Shanmugam
Lyrics powered by www.musixmatch.com

Link