Mazhai Kuruvi

நீல மழைச்சாரல்
தென்றல் நெசவு நடத்துமிடம்
நீல மழைச்சாரல்
வானம் குனிவதிலும், மண்ணை தொடுவதிலும்
காதல் அறிந்திருந்தேன்

கானம் உறைந்துபடும் மௌனபெருவெளியில்
ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்
இதயம் விரித்திருந்தேன்
நான் இயற்கையில் திளைத்திருந்தேன்

சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு
வட்ட பாறையின் மேல் என்னை வா வா என்றது
கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது

கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது
ஒற்றை சிறு குருவி நடத்தும்
ஓரங்க நாடகத்தில்
சற்றே திளைத்திருந்தேன்

கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
ஒரு நாள் கனவோ
இது பேரட்டை பேருறவோ... யார் வரவோ

நீ கண்தொட்டு கடுந்தேகம் காற்றோ
இல்லை கனவில் நான் கேட்கும் பாட்டோ
இது உறவோ... இல்லை பரிவோ

நீல மழைச்சாரல் நநந ந நநநா

அலகை அசைந்தபடி பறந்து ஆகாயம் கொத்தியதே
உலகை உதறி விட்டு சற்றே உயரே பறந்ததுவே

கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
கிச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது

முகிலினம் சர சர சரவென்று கூட
இடிவந்து பட பட படவென்று வீழ
மழை வந்து சட சட சடவென்று சேர
அடை மழை காட்டுக்கு குடை இல்லை மூட

வானவெளி மண்ணில் நழுவி விழுந்ததென்ன
திசையெல்லாம் மழையில் கரைந்து தொலைந்ததென்ன
சிட்டு சிறு குருவி பறந்த திசையும் தெரியவில்லை
விட்டு பிரிந்துவிட்டேன் பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்

விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்
உயிர் நனைந்தேன் நனைந்தேன்
அந்த சிறு குருவி இப்போது
அலைந்து துயர் படுமோ... துயர் படுமோ
இந்த மழை சுமந்து
அதன் ரெக்கை வலித்திடுமோ... வலித்திடுமோ

காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை
கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது காண்
சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி
அழுதது காண் அழுதது காண்

காற்றில் அந்நேரம் கதையே வேறுகதை
கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்தது காண்
சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல்
என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி
அழுதது காண் அழுதது காண்



Credits
Writer(s): Ar Rahman, Ramasamy Thevar Vairamuth
Lyrics powered by www.musixmatch.com

Link