Vellavi Manasu

ஊரே பேசுகின்ற
பூச குரு பூச
தேவமாறே நேசிப்பது
போச நம்ம போச
மூவர்க்கு மூவரே
தேவர்க்கு தேவரே
முக்குலத்தின் காவலரே

வெள்ளாவி மனசுகாரனே
வேல்கம்பு இனத்தானே
வெள்ளூரு சனத்துக்காரனே
வெள்ளந்தி குணத்தானே
வெள்ளாவி மனசுகாரனே
வேல்கம்பு இனத்தானே
வெள்ளூரு சனத்துக்காரனே
வெள்ளந்தி குணத்தானே
நீ வேட்டி சட்ட
போட்டு வரும்
பொட்டு வச்ச ஆகாயம்

நீ தொட்டு தந்த வாழ மரம்
எங்களுக்கு தாயாகும்
நீ கோபத்துல உக்கிரம்
ஆபத்துல சக்கரம்
வீதியில சந்தையில
ஒன்னையும் தான் கண்டா
படப்பு கட்டி நிக்கிறோம்

வெள்ளாவி மனசுகாரனே
வேல்கம்பு இனத்தானே
வெள்ளூரு சனத்துக்காரனே
வெள்ளந்தி குணத்தானே

எத்தனையோ பெருமைகள
வச்சிருக்கும் வம்சமடா
சாத்தியமா குலங்களிலே
எங்க குலம் அம்சமடா
காத்தபோல எங்களுக்கும்
இல்லையிங்க கடிவாளம்
ஆத்திரமும் அரவணைப்பும்
எங்களோட அடையாளம்
பட்ட சாராயம்
இனிக்கும் எங்க ஆம்பளைக்கு
ரட்ட ஈரக்கொல
இருக்குமெங்க பொம்பளைக்கு
நண்டு சிண்டு பெருசு வர
வீராப்ப காட்டுமடா
உண்மையென்ன தெரியணுமா
ஊரில் வந்து கேட்டுக்கடா
முக்குலம்னு சொன்னாலே
எக்குலமும் வரவேற்கும்

எங்க அக்குளிலே எப்போதும்
வீச்சருவா இருக்கும்

வெள்ளாவி மனசுகாரனே
வேல்கம்பு இனத்தானே
வெள்ளூரு சனத்துக்காரனே
வெள்ளந்தி குணத்தானே

ஆதியில வந்தவுக
படையெடுத்து வந்தவுக
நீதி கேட்டு வந்தவுக
வரி நிதி கேட்டு வந்தவுக

தங்கம் விக்க வந்தவுக
தவன காரா வந்தவுக

பூரா சனத்துக்கும்
பூந்தோட்டம் ஆன மண்ணு
யாரா இருந்தாலும்
காத்தோட்டம் தந்த மண்ணு

ஆதி தமிழ் இனம்
அட ஆரம்பித்த பூமியிது

மீதி தமிழர் குடி
அட மீண்டிருக்கும் சீமையிது(அட்ரா மேளத்த)

பொங்க வச்சு ரசிக்கிறதில்
எங்க சனம் தெய்வமடா
பங்காளிங்க மனசரிஞ்சு
பண்டுவமுன் செய்வோமாடா
கொப்பறையில் பொன் அளந்து
மாப்பிள்ளைக்கு கொடுப்போண்டா
நூத்தியெட்டு ஆடறுத்து
பந்தியில குடிப்போண்டா
நெஞ்சக் கொடுத்தாக்க
குறுத்தா காப்போண்டா
நஞ்சக் கொடுத்தாக்க
கரவம் வச்சு தீப்போண்டா
வீரமுள்ள தலமுறையா
வாழ்ந்திருக்கோம் வழி வழியா
மானம்காக்க ஒருதலையா
கண்டிருக்கும் கொல கொலையா
எங்களப் போல் மீச வச்ச
உங்களுக்கும் துடிப்பேறும்
எங்க சந்ததிங்க எல்லோர்க்கும்
பசும்பொன்னே பிடிக்கும்

வெள்ளாவி மனசுகாரனே
வேல்கம்பு இனத்தானே
வெள்ளூரு சனத்துக்காரனே
வெள்ளந்தி குணத்தானே

நீ வேட்டி சட்ட
போட்டு வரும்
பொட்டு வச்ச ஆகாயம்
நீ தொட்டு தந்த வாழ மரம்
எங்களுக்கு தாயாகும்
நீ கோபத்துல உக்கிரம்
ஆபத்துல சக்கரம்
வீதியில சந்தையில
ஒன்னையும் தான் கண்டா
படப்பு கட்டி நிக்கிறோம்



Credits
Writer(s): Kannan, Sarathy
Lyrics powered by www.musixmatch.com

Link