Unnakku Kannai

ஒரு பொன்மானைக் காண தக்கத்திமித்தோம்
ஒரு அம்மானை நான் பாட தக்கத்திமித்தோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதைக் காண்பதில் எந்தன் பரவசம்

ஒரு பொன்மானை நான் காண தக்கத்திமித்தோம்
ஒரு அம்மானை நான் பாட தக்கத்திமித்தோம்

தடாகத்தில் மீன்ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரை பூமீது விழுந்ததென்னவோ
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட
பானம் தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்து கிளி
கால்கள் முளைத்தது என்று நடை போட்டாள்
ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே
அதில் பாரதம் துளிர்விட்டு பூப்போல பூத்தாட
மனம் எங்கும் மணம் வீசுது
எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது

சலங்கையிட்டாள் ஒரு மாது ...

சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேற அது தானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச் சென்றால்
கலை நிலா மேனியிலே சுளைபலா சுவையைக் கண்டேன்
அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது

சலங்கையிட்டாள் ஒரு மாது ...



Credits
Writer(s): T. Rajendar
Lyrics powered by www.musixmatch.com

Link