Naguru Pettai

ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும்

நாகூரு பேட்ட மச்சானுக்கு
நாள் நேரம் நல்லாருக்கு
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹோய்ய் யா

நாகூரு பேட்ட மச்சானுக்கு
நாள் நேரம் நல்லாருக்கு

புலி வேஷம் போடும் பூன
வெளி வேஷம் மாறுது
அறியாத உண்மை இங்கே
அரங்கேற போகுது

வாயா வாயா
வெல்வது மெய்யா பொய்யா
சபாஷ் அட வாயா வாயா
நீ என்ன மெய்யா பொய்யா பார்க்கலாம்

நாகூரு பேட்ட மச்சானுக்கு
நாள் நேரம் நல்லாருக்கு
நாகூரு பேட்ட மச்சானுக்கு
நாள் நேரம் நல்லாருக்கு

ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும்
வாடகை மூஞ்சி மாட்டி
பொய் வேடம் பூட்டி
வரிகளே வரிகளால்
நிறம் மாறுதோ ஹொய்

உண்மைகள் தூங்கும் நேரம்
பொய் கொஞ்சம் பேசும்
உண்மைகள் பேசினால்
என்னாகுமோ

பொய்களின் கைகளில்
விலங்கை மாட்டிவிடு
உண்மையின் கால்களில்
சலங்கை பூட்டிவிடு

எலி அல்ல சிங்கமென்று
எழுதிக்காட்டிவிடு
புலிகளின் குகைகளில்
புகுந்து காட்டிவிடு
எதிர் வந்தால் எமனை பலியுமிடு

வாயா வாயா ஹா ஹா
நீ என்ன மெய்யா பொய்யா பலே பலே
அட வாயா வாயா ஹா ஹா
வெல்வது மெய்யா பொய்யா பார்க்கலாம்

நாகூரு பேட்ட மச்சானுக்கு
நாள் நேரம் நல்லாருக்கு
நாகூரு பேட்ட மச்சானுக்கு
நாள் நேரம் நல்லாருக்கு

அசலுக்கு ஜீவன் ஒன்று
நகலென்றால் நூறு
சத்தியம் ஒன்றுதான்
அசலானது ஓ ஓ ஹொய் யா

யாரையும் நம்ப மாட்டேன்
ஏமாற மாட்டேன்
அசல் எது நகல் எது
தெளிவானது

கிழக்கெது மேற்கெது
விளக்கு தேவையில்லை
கேள்விகள் இறந்தப்பின்
விளக்கம் தேவையில்லை

வெயிலுக்கும் இருளுக்கும்
வேதம் தெரிகிறது
நிழலெது நிஐமெது
நிலையம் புரிகிறது
எனை வெல்ல எவனும் பிறக்கவில்லை

வாயா வாயா ஹா ஹா
வெல்வது மெய்யா பொய்யா
சபாஷ் அட வாயா வாயா ஹா
நீ என்ன மெய்யா பொய்யா பார்க்கலாம்

நாகூரு பேட்ட மச்சானுக்கு
நாள் நேரம் நல்லாருக்கு

ஹெ புலி வேஷம் போடும் பூன
வெளி வேஷம் மாறுது
ஹா அறியாத உண்மை இங்கே
அரங்கேற போகுது

வாயா வாயா ஹா
நீ என்ன மெய்யா பொய்யா
பலே பலே பலே பலே
வாயா வாயா ஆஹா!
வெல்வது நீயா நானா பார்க்கலாம்

நாகூரு பேட்ட மச்சானுக்கு
நாள் நேரம் நல்லாருக்கு
நாகூரு பேட்ட மச்சானுக்கு
நாள் நேரம் நல்லாருக்கு



Credits
Writer(s): Vairamuthu, K. Bhagyaraj
Lyrics powered by www.musixmatch.com

Link