Paadum Vayirumdhan

பாழும் வயிறு தான் பாடா படுத்துது
என்னாடா உலகம் இது அட பொல்லாத உலகம் இது
மாடா உழைக்கிறோம் ஓடா தேயிறோம்
வாழ்க்கை உயரலிங்க ஏழை வாட்டம் நீங்கலிங்க

கூலிக்காரன்
கூலிக்காரன்
நெத்தி வேர்வைய நிலத்தில் சிந்துறான் கூலிக்காரன்
நித்தம் சுமைகள தாங்கி கொள்கிறான் கூலிக்காரன்

பாழும் வயிறு தான் பாடா படுத்துது
என்னாடா உலகம் இது அட பொல்லாத உலகம் இது
மாடா உழைக்கிறோம் ஓடா தேயிறோம்
வாழ்க்கை உயரலிங்க ஏழை வாட்டம் நீங்கலிங்க

மாடிகளின் உசரம் மட்டும் உசந்துகிட்டே போகுதடா
குடிசைகளின் ஓலை மட்டும் அழுதுகிட்டே வாடுதடா

மேடையும் போடுறாங்க-ஓ-ஓ-ஏதேதோ பேசுறாங்க-ஓ-ஓ
சுவர் எழுத்து காயலிங்க தலை எழுத்து மாறலிங்க
சுவர் எழுத்து காயலிங்க தலை எழுத்து மாறலிங்க

பாழும் வயிறு தான் பாடா படுத்துது
என்னாடா உலகம் இது அட பொல்லாத உலகம் இது
மாடா உழைக்கிறோம் ஓடா தேயிறோம்
வாழ்க்கை உயரலிங்க ஏழை வாட்டம் நீங்கலிங்க

ஆடு மாடா பொறந்திருந்தா தழைய கூட தின்னுடலாம்
மனிதர்களா பொறந்துவிட்டோம் கூழுக்கு தான் வாடுகிறோம்
வயித்த தான் கழுவிடவே-ஓ-ஓ
கயித்துல தான் நடக்குறாங்க-ஓ-ஓ
படைச்சவனோ விளையாடுறான் பசிச்சவனோ பலியாகுறான்
படைச்சவனோ விளையாடுறான் பசிச்சவனோ பலியாகுறான்

பாழும் வயிறு தான் பாடா படுத்துது
என்னாடா உலகம் இது அட பொல்லாத உலகம் இது
மாடா உழைக்கிறோம் ஓடா தேயிறோம்
வாழ்க்கை உயரலிங்க ஏழை வாட்டம் நீங்கலிங்க

கூலிக்காரன்
கூலிக்காரன்
கூலிக்காரன்
கூலிக்காரன்

Credits
Writer(s): T. Rajendar
Lyrics powered by www.musixmatch.com

Link