Oru Jeevanthan - Sad

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாளும் பிரியாது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உன்னை சேருவேன் .ஆ .
வேறாரும் நெருங்காமல் மன வாசல் தன்னை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி
உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

காவேரி கடல் சேர அனைத்தான்ன்டி வரவில்லையா ...ஆ .
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையா
வரும் நாளெல்லாம் இனி மதம் உற்சவம்
வளையோசை தான் நல்ல மனிமந்திரம்
நான் தானையா நீலாம்பரி
தாலாட்டவா .ஹ .ஹ .நடு ராத்திரி
சுத்தியும் லயமும் சுகமாய் இணையும் தருணம்

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாளும் பிரியாது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது



Credits
Writer(s): Valee, Vijayananda
Lyrics powered by www.musixmatch.com

Link