Yei Kadavulae - From "Ispade Rajavum Idhaya Raniyum"

பெண்ணாகி வந்ததொரு
மாய பிசாசால் பிடித்திட்ட என்னை
கண்ணால் வெருட்டி
முலையாள் மயக்கி
கடித்தடத்து
குனான் குளிடை தள்ளி
என் போத பொருள் பறிக்க
என்னாது உன்னை மறந்தேன்
இறைவா காசி ஏகாம்பரனே

என் மனச உண்டாக்குன
டேய் கடவுளே வேணா வேணா
நீ கிறுக்குன பெண்ணாலதான்
நான் கிறுக்கனா ஆனேன் வீணா

அழுகுறேன் சிரிக்கிறேன்
கொலம்புறேன் உன்னாலதான்
வெதும்புறேன் வெறுக்குறேன்
தவிக்கிறேன் உன்னாலதான்

என் மனச உண்டாக்குன
டேய் கடவளே வேணா வேணா
நீ கிறுக்குன பெண்ணாலதான்
நான் கிறுக்கனா ஆனேன் வீணா

உன்னாலதானே
தறிகெட்ட காள
பொன்னான வண்டாகி
புது வட்டம் போட்டேன்

பூவான நீயும்
புது வாசம் தந்து
என்னோட உலகத்த
நீ மாத்தி வச்ச

உன்னால நெஞ்சம்தான் ஆடுதே
உள்ளுக்குள் ரயில் எல்லாம் ஓடுது
கண்ணெல்லாம் ஆறாக ஆனதே
மனசெல்லாம் பூகம்பம் ஆகுதே
உன்னை காண ஏங்குது

அழுகுறேன் சிரிக்கிறேன்
கொலம்புறேன் உன்னாலதான்
வெதும்புறேன் வெறுக்குறேன்
தவிக்கிறேன் உன்னாலதான்

என் மனச உண்டாக்குன
டேய் கடவுளே வேணா வேணா
நீ கிறுக்குன பெண்ணாலதான்
நான் கிறுக்கனா ஆனேன் வீணா
ஏகாம்பரனே

உன்னாலதானே
என்னோட வானம்
சிறுபுள்ளி ஆகித்தான்
சிதறுண்டு போச்சு

அன்பால நீயும்
பெரு வாழ்வு தந்து
வேரோடு மொத்தத்த
பறிச்சுதான் போன

உன்னோட நெனப்பிங்க வேகுதே
உள்ளுக்குள் வெஷமாக பாயுதே
உயிர் எல்லாம் ரணமாக ஆனதே
எல்லாமே நீயாகி போனதே
உன்ன காண ஏங்குதே

அழுகுறேன் சிரிக்கிறேன்
கொலம்புறேன் உன்னாலதான்
வெதும்புறேன் வெறுக்குறேன்
தவிக்கிறேன் உன்னாலதான்

என் மனச உண்டாக்குன
டேய் கடவுளே வேணா வேணா
நீ கிறுக்குன பெண்ணாலதான்
நான் கிறுக்கனா ஆனேன் வீணா



Credits
Writer(s): Sam C.s., Ranjit Jeyakodi
Lyrics powered by www.musixmatch.com

Link