Senthoora [Unplugged]

ஹே-ஹே-ஹேய்
ஓஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ
செந்தூரா-ஆ-ஹா
நிதா நிதா நிதானமாக யோசித்தாலும்
நில்லா நில்லா நில்லாமல் ஓடி யோசித்தாலும்
நீ தான் மனம் தேடும் மாண்பாளன்
பூவாய் எனை ஏந்தும் பூபாலன்
என் மடியின் மணவாளன் என தோன்றுதே

செந்தூரா-ஆஹா-சேர்ந்தே செல்வோம்
செந்தூரா-ஆஹா
செங்காந்தள் பூ உன் தேரா-யாஹா
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
செந்தூரா-ஆஹா-சேர்ந்தே செல்வோம்
செந்தூரா-ஆஹா
செங்காந்தள் பூ உன் தேரா-ஹய்
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா

மழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போமா
மரத்தின் அடியில் மணிக்கணக்கினில் கதைப்போமா
பாடல் கேட்போமா, பாடி பார்ப்போமா
மூழ்கத்தான் வேண்டாமா
யாரும் காணாத இன்பம் எல்லாமே
கையில் வந்தே விழுமா
நீயின்றி இனி என்னால் இருந்திட முடிந்திடுமா

செந்தூரா-ஆஹா-சேர்ந்தே செல்வோம்
செந்தூரா-ஆஹா
செங்காந்தள் பூ உன் தேரா-யாஹா
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
செந்தூரா-ஆஹா

அலைந்து நான் களைத்து போகும் போது அள்ளி
அலைந்து நான் களைத்து போகும் போது அள்ளி
மெலிந்து நான் இளைத்து போவதாக சொல்லி
வீட்டில் நளபாகம் செய்வாயா
பொய்யாய் சில நேரம் வைய்வாயா
நான் தொலைந்தால் உனை சேரும்
வழி சொல்வாயா

செந்தூரா-ஆஹா-சேர்ந்தே செல்வோம்
செந்தூரா-ஆஹா
செங்காந்தள் பூ உன் தேரா-ஹய்
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா

எய்தாயா-ஹா-ஆஹா
கண்கள் சொக்க செய்தாயா-ஹா
கையில் சாயச் சொல்வாயா-ஹா-ஹய்
ஏதோ ஆச்சு வெப்பம் மூச்சில்
வெட்கங்கள் போயே போச்சு
செந்தூரா-ஆஹா



Credits
Writer(s): S. Thamarai, D Imman
Lyrics powered by www.musixmatch.com

Link