Oru Kunguma Chengamalam

ஒரு குங்குமச் செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்குமச் செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம்
பசி தூண்டும் அமுதம்
தர வேண்டும் கமலம்
உன் கூந்தல் பூவனம்

ஒரு குங்குமச் செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்குமச் செங்கமலம்

ஆ-ஆ-அ
ஆ-ஆ-ஆ

திருவாய் மலர்வாய்
தருவாய் என் பாவாய்
வருவாய் விரைவாய்
நான் சூடும் பூவாய்
சாம்பல் ருசிக்க தனியாவாய்
ஆ-அ-ஆ
காயைப் புசிக்கும் கனியாவாய்
ஆ-அ-ஆ

பூவைக்கு நாங்கள்
பூ வைக்க வேண்டும்
பூலோகம் யாவும்
பூ கொய்ய வேண்டும்

மின்னலிலே
லா-ல-ல-லா
ஒரு கயிறு எடு
லா-ல-ல-லா
மேகங்களால்
ஒரு தூளி இடு
கதிரோ தளிரோ
இளம் மகளது திருமுகம்

லா-ல-ல-லா-ல-ல-லா
ல-ல-லா-ல-ல-லா-ல-ல-லா
ல-ல-லா-ல-ல-லா-ல-ல-லா
லல்-ல-ல-லா-ல-ல-லா-ல-ல-லா-லா
லல்-ல-ல-லா-ல-ல-லா-ல-ல-லா-லா
ஆஹா-ஆஹா
லா-ல-லா-லா-லா
ஆஹா-ஆஹா
லா-லா-ல-லா

முதுமை ஒரு நாள்
நமை வந்து தீண்டும்
மூன்றாம் காலில்
நாம் நிற்க வேண்டும்
முடியை பார்த்தால் முழு வெள்ளை
ஆ-அ-ஆ
மடியில் தவழும் மகன் பிள்ளை
ஆ-அ-ஆ

நீ ஏந்திக் கொஞ்ச
நான் கொஞ்சம் கெஞ்ச
ஹ-ஹ-ஹ
பூப் போன்ற பிஞ்சு
என் நெஞ்சில் துஞ்ச
பாய் அதனில்
லா-ல-ல-லா
நீ சாய்ந்திருக்க
லா-ல-ல-லா
பசி அடங்கி நான் ஓய்ந்திருக்க
இருக்கும் வரைக்கும்
எனைத் தினசரி அனுசரி

குங்குமச் செங்கமலம் (ஹா)
இள மங்கையின் தங்க முகம் (ஹா)
பசி தூண்டும் அமுதம் (ஆ-ஆ)
தர வேண்டும் கமலம் (ஹ-ஹ-ஹ)
உன் கூந்தல் பூவனம்
ஒரு குங்குமச் செங்கமலம் (ஹா)
இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்குமச் செங்கமலம்
லா-ல-ல-லா-ல



Credits
Writer(s): S. P. Balasubrahmanyam
Lyrics powered by www.musixmatch.com

Link