Pattu Poove

பெண்: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே

ஆண்: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே...

ஆண்: கைகளில் உன்னைத் தொடாமல்
கண்கள் தூங்குமா
சந்தனத் தேனைத் தராமல்
தாகம் நீங்குமா

பெண்: காதலர் கைகள் படாமல்
காதல் ஏதய்யா
சித்திரப் பூவை உன்னோடு
சேர்த்துக் கொள்ளய்யா

ஆண்: இதழ்களின் மேலே இதழ்களினாலே
கலைகளைத் தீட்டு சுபகொடி ஏற்று

பெண்: மன்னவனே என் மன்மதனே
என்னைத் தொட்டு தொட்டு தழுவு

ஆண்: பட்டுப் பூவே மெட்டுப் பாடு

பெண்: கட்டி கலந்தாடி கவி பாட வா

ஆண்: பட்டுப் பூவே...

பெண்: மன்மத பாணம் இப்போது
பாயும் நேரமே
நெஞ்சினில் நாணம் இப்போது
நீங்கும் காலமே

ஆண்: விண்ணுக்கு மேலே இல்லாத
சொர்க்கம் தன்னையே
மண்ணுக்குள் இங்கே கண்டேனே
இன்ப வேளையே

பெண்: மது மொழிக் கேட்டு
மயங்குது நெஞ்சம்
மலர் மழைத் தூவி
அணைக்குது மஞ்சம்

ஆண்: சின்னக் கிளி என் செல்லக் கிளி
என்னைத் தொட்டு தொட்டு தழுவ

பெண்: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா

ஆண்: மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே

பெண்: பட்டுப் பூவே மெட்டுப் பாடு

ஆண்: கட்டி கலந்தாடி கவி பாட வா

ஆ & பெ: பட்டுப் பூவே...



Credits
Writer(s): Muthulingam, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link