Sembaruthy Poove

செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா
கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய்
மனசுக்குள் நுளைந்தாய் நினைவில்லையா

உன்னை சுத்தி சுத்தி வந்தேன் நினைவில்லையா
என்னை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா
அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்

செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா

பூ என்ன சொல்லும் என்று காத்தறியும்
காற்று-என்ன சொல்லும் என்று பூவறியும்
நான் என்ன சொல்ல வந்தேன் நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன்
ஒரு நெஞ்சம் தான் அறியும்

வானவில் என்ன சொல்ல வந்ததென்று
மேகமே உனக்கென்ன தெரியாதா
அல்லி பூ மலர்ந்தது, ஏன் என்று வெண்ணிலவே, உனக்கென்ன தெரியாதா
ஓ ஓ வலியா சுகமா தெரியவில்லை
சிலையா சிதையா புரியவில்லை

அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்

செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா

ஜன்னலில் தெரியும் நிலவுடனே சண்டை போட்டது நினைவில்லையா
மரம் செடி கொடியிடம் மனசுக்குள் இருப்பதை சொல்லியது நினைவில்லையா
எண்பது பக்கம் உள்ள புத்தகம் என்றும் கவிதை எழுதியது நினைவில்லையா
எழுதும் கவிதைகள் யார் கண்ணும் காணு முன்னே கிழித்தது நினைவில்லையா

நிலவில் இரவில் கனவில்லையா
கனவும் கனவாய் நினைவில்லையா
அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்

செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா
கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய்
மனசுக்குள் நுளைந்தாய் நினைவில்லையா

உன்னை சுத்தி சுத்தி வந்தேன் நினைவில்லையா
என்னை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா
அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்



Credits
Writer(s): B. Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link