O Butterfly

ஓ butterfly butterfly
ஏன் விரித்தாய் சிறகை?
Wow wow ஓ butterfly butterfly
ஏன் விரித்தாய் சிறகை?

அருகில் நீ
வருவாயோ?
உனக்காக
திறந்தேன் மனதின் கதவை

அஹா ஓ butterfly butterfly
ஏன் விரித்தாய் சிறகை?
Wow wow ஓ butterfly butterfly
ஏன் விரித்தாய் சிறகை?

எனையும் தான்
உனைப்போலே படைத்தானே
இறைவன் எனும் ஓர் தலைவன்
நெருங்கும் போது
அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப்போல தொடரும் என்னை
மறந்து போகிறாய்

ஆகா, உனக்கு யாரும் தடையுமிங்கு
விதிப்பதில்லையே
ஆகா, எனக்கும் கூட அடிமைக்கோலம்
பிடிப்பதில்லையே

உனை நான் சந்தித்தேன்
உனையே சிந்தித்தேன்
எனை நீ
இணைசேரும்
திருநாள் வருமோ butterfly butterfly

அஹா ஓ butterfly butterfly
மலர்கள்தோறும் நடந்துபோகும்
சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும்
எனது ஜீவனே

ஆகா, விழிகள் நூறு கடிதம் போட்டும்
பதில்கள் இல்லையே
விரகதாபம் அனலை மூட்டும்
பருவம் தொல்லையே

உனை நான்
கொஞ்சத்தான்
மடி மேல்
துஞ்சத்தான்
தினம் நான்
எதிர்பார்க்கும்
திருநாள் வருமோ butterfly butterfly

ஓ butterfly butterfly
ஏன் விரித்தாய் சிறகை?
Wow wow ஓ butterfly butterfly
ஏன் விரித்தாய் சிறகை?

அருகில் நீ
வருவாயோ?
உனக்காக
திறந்தேன் மனதின் கதவை

அஹா ஓ butterfly butterfly butterfly



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link