Ezhu Velaikkara (From "Velaikkaran")

எழு வேலைக்காரா...
எழு வேலைக்காரா இன்றே இன்றே

ஓயாதே
சாயாதே
வாய் மூடி
வாழாதே

எழு வேலைக்காரா இன்றே இன்றே
இனி செய்யும் வேலை நன்றே
அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே

வேர்வை தீயே
தேசம் நீயே
உன் சொல் கேட்டே
வீசும் காற்றே

(போராடு) ஓயாதே
தேயாதே (போராடு)
சாயாதே (போராடு)
ஆராதே
சோராதே (போராடு)
வீழாதே (போராடு)
போராடு

எழு வேலைக்காரா இன்றே இன்றே (போராடு)
இனி செய்யும் வேலை நன்றே
அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே

போராடு
போராடு
போராடு
போராடு

முடியாத செயல் எதுமே
புவி மீது கிடையாது
எழுந்து வா
புயலை போலே

பலம் என்ன புரியாமலே
பணிந்தோமே குனிந்தோமே
நிமிர்ந்து வா
மேலே மேலே

ஒரு முறையே
தரையினில் வாழும் வாய்ப்பு
அதை முறையே
பயனுற வாழும் வாழ்க்கை ஆக்கு
உழைப்பவனே
எழுதிட வேண்டும் தீர்ப்பு
விதைத்தவனே
பசியென போனால் எங்கோ தப்பு

போராடு
ஓயாதே தேயாதே (போராடு)
சாயாதே (போராடு)
ஆராதே சோராதே (போராடு)
வீழாதே (போராடு)

போராடு
எழு வேலைக்காரா இன்றே இன்றே (போராடு)
இனி செய்யும் வேலை நன்றே
அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே

வேர்வை தீயே
தேசம் நீயே
உன் சொல் கேட்டே
வீசும் காற்றே

போராடு
ஓயாதே தேயாதே (போராடு)
சாயாதே(போராடு)
ஆராதே சோராதே(போராடு)
வீழாதே(போராடு)

போராடு
போராடு
போராடு
போராடு
ஓயாதே
சாயாதே
வாய் மூடி
வாழாதே



Credits
Writer(s): Anirudh Ravichander, Vivekanandan Munusamy
Lyrics powered by www.musixmatch.com

Link