Kaalam Yen Kadhali

ஏ ஆற்றல் அரசே வா
ஏ ஆற்றல் அழகே வா

ஏ மாயம் இல்லை
ஆற்றல் மந்திரம் இல்லை
அரசே ஜாலம் இல்லை
வா தந்திரம் இல்லை

ஏ மாயம் இல்லை
ஆற்றல் மந்திரம் இல்லை
அழகே ஜாலம் இல்லை
வா தந்திரம் இல்லை

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ
Einstein'ஐ மாற்ற வந்த
ஆனந்தப் பேரொளியோ
காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

சுற்றி வந்தேன் விண்ணின் வெளியிலே
வெற்றி எல்லாம் விரல் நுனியிலே
அச்சம் இல்லை எந்தன் வாழ்விலே
மச்சம் உண்டு எந்தன் நெஞ்சிலே

காலத்தின் சாவி கடிகாரக் கூட்டுக்குள்
காணாத வாழ்க்கை எந்தன் கட்டுப்பாட்டுக்குள்
மரணத்தை வெல்லும் வித்தை நான் சொல்லட்டா
ஆண்டவன் செல்லப் பிள்ளை
நானோ நானோ ஓஹோஓ

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ
Einstein'ஐ மாற்ற வந்த
ஆனந்தப் பேரொளியோ
காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

காலத்தின் கையில் நானும்
பிள்ளை போல ஆவேன்
காதலி கையைப் பற்றி
முன்னும் பின்னும் போவேன்
சந்திர சூரியனை கூலியாக கேட்பேன்

உலகத்தின் வாழ்வையெல்லாம்
ஒற்றை நாளில் வாழ யோசிப்பேன்
வா மச்சக்காரா மாயக்காரா
மச்சக்காரா உச்சக்காரா

ஆற்றல் அரசே அரசே வா வா
ஆற்றல் அழகே அழகே வா வா
ஆக்கும் அறிவே அறிவே வா வா
காக்கும் கரமே கரமே வா வா

போற்றும் பொருளே வா
மாற்றும் திறனே வா
போற்றும் பொருளே வா
மாற்றும் திறனே வா

ஏ மாயம் இல்லை
ஆற்றல் மந்திரம் இல்லை
அரசே ஜாலம் இல்லை
வா தந்திரம் இல்லை

ஏ மாயம் இல்லை
ஆற்றல் மந்திரம் இல்லை
அழகே ஜாலம் இல்லை
வா தந்திரம் இல்லை

காலம் என் காதலி
கண் காணா மோகினி
Einstein'ஐ மாற்ற வந்த
ஆனந்தப் பேரொளியோ
காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ யோ யோ



Credits
Writer(s): Vairamuthu, A. R. Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link