Eravinil Bhayandhen

இரவினில் பயந்தேன் நானம்மா
இதை சொன்னதில்லை நானும் தெரியுமா
இதயமாய் இருந்தாய் நீயம்மா
உன் உள்ளம் அந்த உண்மை அறியுமா

உனக்கெல்லாம் தெரியுமே என் அம்மா
உனக்கெல்லாம் தெரியுமே என் அம்மா

ஓ கூட்டத்தில் நானுமே தனி அம்மா
குயில் கூட்டை திரும்பக் காண இயலுமா
பாரம்மா உனக்கு நான் பாரமா
என் நினைவு உனது நெஞ்சில் இருக்குமா

நான் கெட்டப் பையனா சொல்லம்மா
நான் கெட்டப் பையனா
சொல்லம்மா

அன்போடு தான் அப்பா எனை
தட்டாமலை சுற்றும் போது பயம் அம்மா
அந்நேரமே கண் தேடுமே உனைக் காணவே
போராடுமே என் அம்மா

பயத்தினால் உரைந்து போவேன் நான் அம்மா
அதையும் நான் சொன்னதில்லை கேளம்மா
உன் மடி மறுபடி கிடைக்குமா
பிள்ளையை அன்னை மறப்பது நியாயமா

உனக்கெல்லாம் தெரியுமே என் அம்மா
உனக்கெல்லாம் தெரியுமே, அம்மா

ஓ இரவினில் பயந்தேன் நானம்மா
இதை சொன்னதில்லை நானும் தெரியுமா
இதயமாய் இருந்தாய் நீயம்மா
உன் உள்ளம் அந்த உண்மை அறியுமா

உனக்கெல்லாம் தெரியுமே என் அம்மா
உனக்கெல்லாம் தெரியுமே
என் அம்மா



Credits
Writer(s): Shankar-ehsaan-loy, Maruda Bharani
Lyrics powered by www.musixmatch.com

Link