Vaanam Enna Bhoomi Enna - Studio

வானம் என்ன?, பூமி என்ன? எட்டிப்பாரடா
நாளை நம் கையில்
காலம் என்ன?, நேரம் என்ன? முட்டிமோதடா
வாழ்க்கை உன் பையில்

பூமி பூப்பந்து பந்தாடடா, பந்தாடடா
மூடி வைத்த மண்ணை ஏறி எட்டிப் பார்க்குதே
சின்ன சின்ன விதையும்தானடா
சூழ்ந்துள்ள தடையை தாண்டி வெற்றி சேர்க்கவே
உன்தன் நெஞ்சில் உறுதிகொள்ளடா

அஞ்சாதே, துஞ்சாதே

வானம் என்ன?, பூமி என்ன? எட்டிப்பாரடா
நாளை நம் கையில்

அச்சம் தவிர் நெஞ்சோடு நீயும்
பாதைப் பல உண்டாகும்
பார்வைத் திற தெம்போடு நாளும்
பாறை இனிப் பூவாகும்

ஆ ஜுபி ஜீபி ஜாபா
ஆ ஜுபி ஜீபி ஜாபா
ஆ ஜுபி ஜீபி ஜாபா
ஆ ஜுபி ஜீபி ஜாபா

பாடாமல் இசையில்லை
பேசாமல் மொழியில்லை
ஓடாமல் நதியில்லை
உழைக்காமல் உயர்வில்லை

தேடு தேடு, ஓடு ஓடு
கண்முன்னே முன்னேற்றம் கூடும்

வானம் என்ன?, பூமி என்ன? எட்டிப்பாரடா
நாளை நம் கையில்
காலம் என்ன?, நேரம் என்ன? முட்டிமோதடா
வாழ்க்கை உன் பையில்

மோதி உடை அழகாக நீயும்
பாறை இனி சிலையாகும்
போதி அடை தெளிவாக நாளும்
ஆசை மனம் கலையாகும்

(ஆஆஆ...)

ஊன்றாமல் பயிரில்லை
கேளாமல் பதிலில்லை
தேடாமல் பொருளில்லை
வாழாமல் சுகம் இல்லை

காலை மாலை, மாற்றங்கள் நூறு
மண் மீது என்னாளும் தேடு

வானம் என்ன?, பூமி என்ன? எட்டிப்பாரடா
நாளை நம் கையில்
காலம் என்ன?, நேரம் என்ன? முட்டிமோதடா
வாழ்க்கை உன் பையில்
பூமி பூப்பந்து பந்தாடடா, பந்தாடடா

Come on everybody!
பாபப்பா பாபப்பா பாபப்பா
தூருத்து தூருத்து தூருத்துரு
ஹே ராப பப்ப ராப பப்ப பா
தூருத்து தூருத்து தூருத்துரு
I wish you
God bless you



Credits
Writer(s): R K Sunder, Piraisoodan
Lyrics powered by www.musixmatch.com

Link