En Kanmaniyea

ஏ டாக்ஸி டாக்ஸி சே சமயத்துக்கு ஒரு டாக்ஸி கூட கெடைக்காது!

Hey Look Arvind - Don't touch me - huh. Taxi. Taxi.

கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
Shut up. Don't talk to me! Hey Taxi Taxi Taxi.

என் பொன்மணிக்குக் கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
எவளாவது ஏமாந்தவ காதுல பூ வச்சுக்கிட்டு இருப்பா அவகிட்ட போயி சொல்லு

சிந்துதடி சிந்துதடி முத்து மழைப்பூவு
அடடா என் கவியரசர் கம்பா

உன் பொன்னுடம்பில் ஈரம் பட வந்துவிடும் நோவு
ஆஹா ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுதான்

வீண் கோபம் ஏன்?
டடடடடா
ஆண் பாவம் ஏன்?
ஏ பபரபப்பா
I love you (Oh) I love you (No)
நீ எங்கு (Don't) செல்லக் கூடும் என்னை மீறி? (Aah)

என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
கேக்கமுடியாது போய் தொலையிறியா? அய்யோ

என் பொன்மணிக்குக் கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
அதே பழைய பல்லவிய திருப்பிச் சொல்லாதே போய்யா

எட்டி எட்டிச் சென்று வெட்டும் பார்வை கொண்டு
சிற்றிளம் பூவும் யாரைத் தேடுது?
ஆ? சிற்றிளம்பூவு ஆட்டோ தேடுது டாக்ஸிய தேடுது
இன்னொரு ஜோடிக்கு ஆளக் கூடத் தேடும்

சொல் ஏனிப்படி ஏனம்மணி நாடகம்?
ஆமா நாடகம். திருநாவுக்கரசி! சொல்ல வந்துட்டாரு திருநாவுக்கரசர்!

நித்தம் நித்தம் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து வட்டமே போட்ட மோகம் தீர்ந்ததா?
ஆமா தீர்ந்து போச்சு Empty-யா சுத்திக்கிட்டுருக்கேன். ஐயா போய்ட்டு வரீங்களா?

ஓ சிங்காரியே இங்கேனடி ஆத்திரம்
ஆத்திரமா? சும்மா இருய்யா வயிறு பத்திக்கிட்டு எரியுது
Fire Engine!

நீயில்லாமல் நானா என் பூங்கொடி?
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

நானில்லாமல் நீயும் இங்கேதடி
தோ. இருக்கேனே நல்லாதான இருக்கேன்? பாரு.

பூந்தென்றலே என் செல்வமே
ராபப்பபா ரபப்பப்பபா

I love you I love you
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி?

என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
Stop it Man! கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போச்சு ப்பா

என் பொன்மணிக்குக் கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
இந்த சினிமா டயலாக்லாம் சொல்லி என்னை போரடிக்காத போய்யா

வீண் கோபம் ஏன்?
வெவ்வெவ்வெவ்வெவ்வே

ஆண் பாவம் ஏன்?
பாவம்? My foot!

I love you I love you
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி?

என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
Hello! can you give me lift? aah. Thank You!

என் பொன்மணிக்குக் கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு

சுட்டும் விழிச்சுடர் என்று ஒரு பொய் கூறிப் பாடினால் ஆஹா ஓஹோ என்கிறாய்
அது பாரதியார் பாட்டுய்யா
அவனவன் ட்யூனைத்தான் திருடுறான்னா நீ பாட்டையே திருடறே

பொய் பாட்டில் சொன்னால் கவியென்கிறாய் கண்மணி
அடப்பாவி! பாரதியார் பாட்டையே பொய்யிங்கறயா?

உன் மேல் ஆசை வைத்து நானோர் பொய்யைச் சொன்னால் சீறிடும் தென்றலாகிப் போகிறாய்
Yes. உனக்காக மையம் கொண்ட இந்தப் புயல் இப்பக் கரையைக் கடந்துருச்சி. போ

மெய் பாட்டில் சொல்வேன் ஏற்றுக் கொள்வாய் கண்மணி
நீ பொய்யிலே பொறந்து பொய்யிலே வளந்தவன். ஒங்கிட்ட ஏதுய்யா மெய்யி?

தேனைப் போன்ற காதல் வேம்பாகுமா?
ஹா. காதலாவது கத்திரிக்காயாவது.

தேவி என்னைச் சேரவே வீம்பாகுமா
Don't follow me

என் நெஞ்சிலே உன் மந்திரம்
ரப்பப்பபா ரபபப்பபா
I love you I love you
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி?

என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
பெரிய கிருஷ்ண பரமாத்மா இவரு சொல்ற கீதையைக் கேட்கணுமாம்!

என் பொன்மணிக்குக் கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
சும்மா இருய்யா மின்னுவதெல்லாம் பொன்னல்ல தெரிஞ்சுக்கோ

வீண் கோபம் ஏன்?
நீ திருந்தவே மாட்டே

ஆண் பாவம் ஏன்?
ச்சோ. தாங்கலைய்யா

I love you I love you
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி?

(என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு)
நீ அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்னு தெரிஞ்சதும் எவ்வளவு துடிச்சுப் போய் ஓடி வந்தேன் தெரியுமா?
(என் பொன்மணிக்குக் கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு)
பெரிய Football player-ஆம். ஒனக்கு Foot Ball மட்டும்தான்யா தெரியும்.
(சிந்துதடி சிந்துதடி முத்து மழைப்பூவு)
எனக்கு என்னெல்லாம் தெரியும் தெரியுமா? Music, dance, drama, chess, carom, கபடி, பல்லாங்குழி, மங்காத்தா எல்லாம் தெரியும்.

(உன் பொன்னுடம்பில் ஈரம் பட வந்துவிடும் நோவு)
இதெல்லாம் கத்துக்கிட்டு வந்தாலும் உன்னைக் கட்டிக்கமாட்டேன்.
Taxi. Taxiiiii



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link