Anbe Nee Yenna

அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
கண்கள் கவர்ந்து நிற்கும் வின் ஆளும் இந்திரனோ
பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ
சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ

அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ

வஞ்சிப் பெண் ஆசைக் கொள்ளும் கட்டழகா
வைகை நீராட வந்த கள்ளழகா
தேக்காலே சிற்பி செய்த தோலழகா
தோகைக்கு மோகம் தந்த ஆளழகா
நீங்காமல் இருப்பேன் நீ தான் அணைத்தால்
நாணாமல் கொடுப்பேன் தேன் தான் எடுத்தால்
ஆசை பெருகுதையா இடையினில்
ஆடை நழுவுதையா
மேனி உருகுதையா மனதினில்
மோகம் வளருதையா

அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
கண்கள் கவர்ந்து நிற்கும் வின் ஆளும் இந்திரனோ
பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ
சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ
அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ

அம்மாடி போட்டதென்ன சொக்குப் பொடி
என்னாகும் பாவம் இந்த சின்னக் கொடி
பொன்னான கையை கொஞ்சம் தொட்டுப் பிடி
சிங்கார ராகம் வைத்து மெட்டுப் படி
தாளாத மயக்கம் தோன்றும் எனக்கு
நான் கொண்ட எதையும் தந்தேன் உனக்கு
பாவை உதடுகளில் உனக்கென பாலும் வடிகிறது
காதல் நினைவுகளில் குளிர் தரும் காற்றும் சுடுகிறது

அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ
மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ
கண்கள் கவர்ந்து நிற்கும் கண்ணான கண்மணியோ
காளை மனம் மயங்கும் பொன்னான பெண்மணியோ
சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பைங்கிளியோ

அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ
மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ
அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ
மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link