Saayamal Saaigindra

Dhum Dhum Dhum Dhum
Dhum Dhum
You're my sky
Dhum Dhum Dhum Dhum
You are my eye

Dhum Dhum Dhum Dhum
Dhum Dhum
You're my sky
Dhum Dhum Dhum Dhum
You are my eye

ஹோ ஓ ஓ
சாயாமல் சாய்கின்ற மாலை
எந்தன் தோள் மீது
சாய்ந்தாட நீ
ஹோ ஓ ஓ
தீ இன்றித் திண்டாடும் வேளை
எந்தன் நெஞ்சோடு நெஞ்சாக நீ
ஹோ ஓ ஓ... ஓஒ

விண்மீன்கள் வாழ்கின்ற
வீதி மேலே
நீ தான் என் பால் நிலா
தேயாமல் ஓயாமல் பாயும்
காதலாய் அன்பே...

காலங்கள் கோலங்கள்
மாறட்டும்
மாறாமல் என்னோடு
ஆடடி
தாளங்கள் தீர்ந்தாலும்
தீரட்டும்
தீராமல் என்னோடு
நீ ஆடு

Dhum Dhum Dhum Dhum
Dhum Dhum
You're my sky
Dhum Dhum Dhum Dhum
You are my eye

உன் கையை நான் கோர்க்கும் போது
இந்தப் பூலோகம் பூ மேடையாய்
என் காதில் நீ பேசும் போது
எந்தன் நெஞ்சோடு தேனோடையாய்

யாருக்கும் கேட்காத பாடல் ஒன்றை
நாம் மட்டும் கேட்கிறோம்
வேறாரும் காணாத காதல்
காண்கிறோம்... அன்பே...

காலங்கள் கோலங்கள்
மாறட்டும்
மாறாமல் என்னோடு
ஆடடி
தாளங்கள் தீர்ந்தாலும்
தீரட்டும்
தீராமல் என்னோடு
நீ ஆடு

வானத்தின் சாயங்கள் மாறும்
உந்தன் வண்ணங்கள் மாறாதடி
பூங்காற்றின் வாசங்கள் தீரும்
உந்தன் இன்பங்கள் தீராதடி

மண் தோன்றும் எல்லாமே
மாறிப்போகும்
நம் காதல் மாறுமா
உன் மீது நான் கொண்ட மோகம்
தீருமா... அன்பே...

காலங்கள் கோலங்கள்
மாறட்டும்
மாறாமல் என்னோடு
ஆடடி
தாளங்கள் தீர்ந்தாலும்
தீரட்டும்
தீராமல் என்னோடு
நீ ஆடு

Dhum Dhum Dhum Dhum
Dhum Dhum
You're my sky
Dhum Dhum Dhum Dhum
You are my eye

Dhum Dhum Dhum Dhum
Dhum Dhum
You're my sky
Dhum Dhum Dhum Dhum
You are my eye



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, Mohamaad Ghibran Ghanesh Balaji
Lyrics powered by www.musixmatch.com

Link