Nee Illama (Madras Gig Season 2)

போதுமே இந்த மூச்சோ ரணம் ஆகுதே
மூடுன விழியில் சோகம் எட்டி பாக்குது
தொடச்சு போட்டு தினம் தாண்டி போனாலும்
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல

இராப்பகல் மறந்து பேயா வேல பாக்குறேன்
தூங்கித்தான் தொலைக்க ஏதோ செஞ்சி தோக்குறேன்
சத்தமில்லாம ஒரு நாள கடந்தாலும்
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல

பத்து பேரு மொத்தமா என்கூட ஒன்னாக நின்னாலுமே
அட நான் மட்டும் ஒட்டாம ஒத்தையில் நிக்குறேனே
யாருக்கும் கேக்காம தனியா உன்கூட பேசுறேனே
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல

காயத்த மறைக்க சாக்கு எதுவும் தேடல
பாரத்த இறக்க தோளும் எதிர் பாக்கல
மரத்து போச்சு என நானும் நடிச்சாலும்
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல

என்ன மீறி எங்கயோ உன் பேர தூரத்தில் கேட்டாலுமே
அட அங்கேயும் முன்னுறு துண்டாகி நிக்கிறேனே
உன்னால கண்ணாடி முன்னால முட்டாளா நிக்குறேனே
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல

நான் நல்லா நடிச்சி உன்னோட நினைப்ப தூக்கி போடா பாக்குறேனே
சந்தேகம் இல்லாம திண்டாடுறேன்
என்னலாம் தோணுதோ செஞ்சி தான் என்ன நான் மாத்திக்க பாக்குறேனே
கேக்காத நெஞ்சோடு கெஞ்சுறேனே

வேகமா வரும் கண்ணீரை கண்டு ஓடுறேன்
போலியா ஒரு சிரிப்பால் ஊர ஏக்கிறேன்
மனச மாத்த முடியாம தவிச்சேனே
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
என்கூட இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
என்கூட இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
என்கூட இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
என்கூட இல்லாம நான் ஒண்ணுமே இல்ல



Credits
Writer(s): S.n. Anuradha, Mohamaad Ghibran Ghanesh Balaji
Lyrics powered by www.musixmatch.com

Link