Malargalae

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா

உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான் வா...

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா

உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான் வா...

மேகம் திறந்து கொண்டு
மண்ணில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா

மார்பில் ஒளிந்து கொண்டால்
மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா

என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா
மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவதுதான் முறையா

நினைக்காத நேரமில்லை காதல் ரதியே ரதியே
உன் பேரை சொன்னால் போதும் நின்று வழி விடும் காதல் நதியே

என் சுவாசம் உன் மூச்சில்
உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா

உருகியதே எனது உள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான் வா...

பூவில் நாவிருந்தால்
காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்

நிலா தமிழ் அறிந்தால்
அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்

வாழ்வோடு வளர்பிறைதானே
வண்ண நிலவே நிலவே

வானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவு
உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
ஊனோடு உயிரை போல உறைந்து போனதுதான் உறவே

மறக்காது உன் ராகம்
மரிக்காது என் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா

உருகியதே எனது உள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான் வா...



Credits
Writer(s): Vairamuthu, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link