Vetrumai Pazhagu

பிரிவேதும் இல்லா தேசம்
வேண்டாம்
அடையாளம் இல்லா வேடம்
வேண்டாம்
என் போல நான் உன் போல நீயும்
வாழும் நாள் வருமா?

ஐவிரலும் ஒன்றாகி இணைவது
முறை இல்லை ஓர் பயன் இல்லை
பிரிவறிந்து வாழ்ந்தால் என்ன?
பொய்கள் சொல்லாதே நாம் ஒன்றென

இயந்திரங்கள் போலே மாறி
என்ன செய்யப் போகின்றோம்?
முகம் இழந்து நீயும் நானும்
யாரை பார்க்க போகின்றோம்?

வேற்றுமை பழகு - பழகின்
தேசமே அழகு - மனமே
வேற்றுமை பழகு - பழகின்
தேசமே அழகு

இமயம் தொடங்கி
முகமும் நிறமும் மொழியும் நிலமும் வேறன்றோ
குமரி வரையில்
நதி காற்று வெப்பம் யாவும் மாறுமே!

பேதங்கள் மதித்திடும் போது
வேதங்கள் தேவைப்படாது
மதம் திணித்து மொழி திணித்து
இனம் அழித்து ஒன்றாதல் தீது!

உணவுகள் ஏற்றோம் உணர்வையும் ஏற்போம்
உயர்வு தாழ்வு நீக்கினால்
பிரிவின் மாட்சி காணுவோம்

அருகினில் வா
அணைத்திட வா
இனிப்புடன் வா
நம் பேதங்கள் கொண்டாடுவோம்

வேற்றுமை பழகு
வேற்றுமை பழகு - பழகின்
தேசமே அழகு - மனமே
வேற்றுமை பழகு - பழகின்
தேசமே அழகு - மனமே
வேற்றுமை பழகு - பழகின்
தேசமே அழகு

இயந்திரங்கள் போலே மாறி
என்ன செய்யப் போகின்றோம்?
முகம் இழந்து நீயும் நானும்
யாரை பார்க்க போகின்றோம்?

மனமே
வேற்றுமை பழகு - பழகின்
தேசமே அழகு - மனமே
வேற்றுமை பழகு - பழகின்
தேசமே அழகு
வேற்றுமை பழகு - பழகின்
தேசமே அழகு - மனமே
வேற்றுமை பழகு - பழகின்
தேசமே அழகு

அதுவே அழகு
பழகு வேற்றுமை பழகு



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, Jerard Felix
Lyrics powered by www.musixmatch.com

Link