Malaiyoram Mankuruvi

மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி
மகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி
மணமேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா
மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா
மகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு தேடுதய்யா

பூங்காத்து வீசுது அனலைப் பூசுது
பொன் மானே பக்கத்திலே கொஞ்சம் வாம்மா
தாங்காத ஆசையில் தவிக்கும் வேளையில்
தாலாட்டுப் பாடிக் கொஞ்சம் கொஞ்சலாமா
சேலை கட்டும் நந்தவனம் நீயா
செம்பருத்திப் பூவுக்கு நீ தாயா
கண்ணுக்குள்ளே காதலெனும் தீயா
சின்ன இடை தேய்வதென்ன நோயா
கட்டியணைச்சா முத்தம் பதிச்சா
நோய் முழுக்கத் தீர்ந்துவிடும் வாம்மா ஹோ

மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா
மகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு தேடுதய்யா
மணமேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா
மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி
மகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி

துரு ருருருரு ருருருரு ருரு ருருருரு ருருருரு
துரு ருருருருருரு ருரு துரு ருரு ருருருருருரு
துரு ருரு ருருருருருரு

கல்யாண மாப்பிள்ளை
எனை நீ பார்க்கலை
கண் மூடி நாணத்திலே நிக்கலாமா
ஊரெங்கும் தோரணம்
நடக்கும் ஊர்வலம்
உன்னோட கன்னத்திலே வைக்கலாமா
அந்தியிலே சந்தனத்தைப் பூச
ஆசைகளைக் கண்களிலே பேச
சேலையிலே நீ விசிறி வீச
காலையிலே பார்த்த கண்ணுக் கூச
என்ன சுகமோ எப்ப வருமோ
என்னென்னவோ பண்ணுதய்யா ஆசை ஓ

மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதடி
மகராசன் உன் வரவை ராப்பகலா என் மனசு தேடுதய்யா
மணமேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா
மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதிப் பாடுதய்யா
மகராணி உன் வரவை ராப்பகலா எம்மனசு தேடுதடி

Credits
Writer(s): Deva, Muthulingam
Lyrics powered by www.musixmatch.com

Link