Pulveli Pulveli

புல்வெளி புல்வெளி
தன்னில் பனித்துளி பனித்துளி
ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா

அதை சூரியன் சூரியன் வந்து
செல்லமாய் செல்லமாய் கிள்ளி
எழுப்புது எழுப்புது ஏனம்மா?

இதயம் பறவை போலாகுமா?
பறந்தால் வானமே போதுமா?
நான் புல்லில் இறங்கவா?
இல்லை பூவில் உறங்கவா?

புல்வெளி புல்வெளி
தன்னில் பனித்துளி பனித்துளி
ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா

சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு?
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலனூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு?

இலைகளில் ஒளிகின்ற பூக்கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்

பூவனமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்

அம்மம்மா...
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்

புல்வெளி புல்வெளி
தன்னில் பனித்துளி பனித்துளி
ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா

துள்துள்துள் துள்துள்துள் துள்ளும் அணிலே
மின்னல்போல் போகும் வேகம் தந்தது யாரு?
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு?

மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி

பூவனமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்

அம்மம்மா...
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்

புல்வெளி புல்வெளி
தன்னில் பனித்துளி பனித்துளி
ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா

அதை சூரியன் சூரியன் வந்து
செல்லமாய் செல்லமாய் கிள்ளி
எழுப்புது எழுப்புது ஏனம்மா?

இதயம் பறவை போலாகுமா?
பறந்தால் வானமே போதுமா?
நான் புல்லில் இறங்கவா?
இல்லை பூவில் உறங்கவா?



Credits
Writer(s): Deva, Vairamuthu Ramasamy Thevar
Lyrics powered by www.musixmatch.com

Link