Neeyum Naanum

நீயும் நானும் பார்த்த வானம்
தேய்கிறதே தேய்கிறதே
மார்பின் மீது வாழும் வாசம்
கேட்கிறதே கேட்கிறதே

எங்கே சென்றாய்
என் மழைதுளி நஞ்சாகுதே
கண்ணீர் எல்லாம்
உன் பிரிவினில் முள்ளாகுதே

காணலையே காணலையே
வாங்கி வந்த வானவில்லை
மீட்டிடுவேன் மீட்டிடுவேன்
வண்ணம் இன்னும் தீரவில்லை

நீயும் நானும் பார்த்த வானம்
தேய்கிறதே தேய்கிறதே
மார்பின் மீது வாழும் வாசம்
கேட்கிறதே கேட்கிறதே

வேண்டாம் என்றே
காலம் கூறும்
போதும் என்றே
பாதம் வேகும்

ஆனாலும் மலைதாண்டி
தீராத கடல்தாண்டி
தீ தாண்டி வருவேனே
பொறு கண்மணி

வாழ்வென்னை வெறுத்தாலும்
வயதேறி நரைத்தாலும்
நீ வாடும் நிலம் தேடி
வருவேனடி

ஊன் உள்ளம் சிதைந்தாலும்
உயிர் என்னை பிரிந்தாலும்
உன்னை காண வருவேனே நானே
என் தேனே வந்தேனே

எங்கே சென்றாய்
என் மழைதுளி நஞ்சாகுதே
கண்ணீர் எல்லாம்
உன் பிரிவினில் முள்ளாகுதே

காணலலையே காணலையே
வாங்கி வந்த வானவில்லை
மீட்டிடுவேன் மீட்டிடுவேன்
வண்ணம் இன்னும் தீரவில்லை

நீயும் நானும் பார்த்த வானம்
தேய்கிறதே தேய்கிறதே
மார்பின் மீது வாழும் வாசம்
கேட்கிறதே கேட்கிறதே



Credits
Writer(s): Karthik Netha, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link