Kaadhal Enna Kannamoochi

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்பூச்சி கூட்டமா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்பூச்சி கூட்டமா

கண்ணுக்குள் பாரம்மா நீ இன்றி யாரம்மா
கோவங்கள் இன்னும் இங்கே ஏனம்மா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்பூச்சி கூட்டமா
ஹோ...

கூந்தல் வருடும் காற்று
அது நானா இருந்தேன் தெரியாதா
கொலுசு கொஞ்சும் பாட்டு
அதன் பல்லவியானேன் புரியாதா

சின்ன சின்ன மூக்குத்தியில் வைரமாய்
மின்னுவதும் காதல் தரும் ஒளிதான்
வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய்
உன்னை சுற்றி மூடுவதும் அதுதான்
பனிப்பூவில் வாசமாய்
கலந்தேனே நானம்மா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்பூச்சி கூட்டமா
ஹோ...

நிலவை உரசும் மேகம்
அந்த நினைவை நினைத்தே உருகாதா
உயிரை பருகும் காதல்
அது ஒருநாள் உனையும் பருகாதா

நீ முடிந்த பூவில் ஒரு இதழாய்
வாழ்ந்துவிட்டு போவதற்க்கு நினைத்தேன்
நீ நடந்த மண்ணெடுத்து சிலநாள்
சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன்
நிழல்த்தீண்டும் போதிலும்
மனதோடு வேர்க்கிறேன்

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்பூச்சி கூட்டமா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்பூச்சி கூட்டமா
கண்ணுக்குள் பாரம்மா நீ இன்றி யாரம்மா
கோவங்கள் இன்னும் இங்கே ஏனம்மா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம்பூச்சி கூட்டமா
ஹோ...



Credits
Writer(s): A R Rahman, Bharathi Palani
Lyrics powered by www.musixmatch.com

Link