Konjalam Konjalaai Enai Kolvaaya

அழகே உன்னை பார்த்தே
அசைந்தே நானும் போனேன்
இதழே ஈர இதழே
ஐயையோ நானும் சாய்ந்தேனே

சீ போடி உன் முகம் கோடி
நிலவென மின்னும் அப்படி மின்னும்
உன்னை ஒட்டி கொள்ளவும்
உரசி கொள்ளவும்
ஏங்கும் என் மனம் ஏங்கும்
நீ போகும் பாதையில் உன்னை தொடர்வேன்
சாலை எங்கிலும் தூசாய் கொஞ்சம்
கொஞ்சலாய் என்னை கொல்வாயா

ஓஹோ ஊஞ்சலாய்
நெஞ்சோரத்திலே
சாயங்காலத்திலே ஆடினாய்
மஞ்சளாய் தூவானத்திலே
நீதானே தெரிந்தாய்
ஓஹோ ஊஞ்சலாய்
நெஞ்சோரத்திலே
சாயங்காலத்திலே ஆடினாய்
மஞ்சளாய் தூவானத்திலே
நீதானே தெரிந்தாய்

ஓ... எனக்கென தனியாய்
நடை பாதை அதில் என்னை
என் நிழலாய் பின்தொடர்ந்தாய்
ஓர் உறவின்றி தவித்திடும் உலகத்திலே
எனக்காக ஏங்கும் புது உறவும் நீயா
அடி என எனக்கென்ன ஆச்சு
தலைகீழாய் நாட்களும் போச்சு
கடைசி பேருந்துக்காக
நிற்கும் பயணி நான்தானோ
இனம் புரியா இன்பம் துன்பம்
ரெண்டும் ஒன்றாய்
எந்தன் நெஞ்சில் ஏனோ தானோ
என்றே ஆனேன்னடி
ஒரு முத்தத்தாலே எனை தித்திதாலே
இமை ஓரதாலே வீசி வீசி போகிறாய்
எல்லாம் மாறி போச்சு
அட ஏதோ புதுசா ஆச்சு
இதை வெளியே சொல்ல தெரியாதம்மா
கொஞ்சம் கொஞ்சமாய்
நீ நீ யாரடி உள்ளே கல்லையும்
வெளியே பூவையும் வீசினாய்
போங்கடி கொண்டாட்டத்திலே
ரெண்டாய் நிற்கிறேனே
நீ நீ யாரடி உள்ளே கல்லையும்
வெளியே பூவையும் வீசினாய்
போங்கடி கொண்டாட்டத்திலே
ரெண்டாய் நிற்கிறேனே



Credits
Writer(s): Yuvan Shankar Raaja, 1
Lyrics powered by www.musixmatch.com

Link