Malarodu Pirandhavla

மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா
உயிரோடு கலந்தவளா
இவள்தானா இவள்தானா இவள்தானா

மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா
எனை ஆளும் மன்னவரா
இவர்தானா இவர்தானா இவர்தானா

வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா
கண்களிலே காதலர்கள் போர்க்களமா

மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா
எனை ஆளும் மன்னவரா
இவர்தானா இவர்தானா இவர்தானா

உன்தீண்டலில் உயிர்வரை வேர்க்கிறேன்
என் இரவினை நீளமாய் கேட்கிறேன்

உன் நாணத்தை ஆசகம் கேட்கிறேன்
பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன்

இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும்
தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும்
மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை
பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம்

மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா
எனை ஆளும் மன்னவரா
இவர்தானா இவர்தானா இவர்தானா

உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன்
நான் மறுபடி மழலையாய் ஆகிறேன்
வெண்சாமரம் இமைகளால் வீசுவேன்
என் கண்களால் காதலை பேசுவேன்

சந்தனசிலையா செய்தது மன்மத கலையா
சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா
காதலே காதலே புதுகவிதையா தாய்மடி
வாய்மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே

மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா
உயிரோடு கலந்தவளா
இவள்தானா இவள்தானா இவள்தானா



Credits
Writer(s): Deva Ind
Lyrics powered by www.musixmatch.com

Link