Idhayamae

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே

பனியாக உருகி நதியாக மாறி அலைவீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவொடு வாழ்ந்து
உயிர் காதல் உறவடி கலந்தேன் இன்று

இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
கோலம் கலைந்ததே, புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு கானல் தான்

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே

என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா

இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
ஜீவன் நீயம்மா, என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு கானல் தான்

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே

இதயமே இதயமே
உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே



Credits
Writer(s): Ilaiyaraaja, Piraisoodan
Lyrics powered by www.musixmatch.com

Link