Maruvaarthai - Unplugged

மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே

தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும், நீ
விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் என்னும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தருமுன்பே கனவாகி கலைந்தாய்
பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்

மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்

மயில் தோகை போலே விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்



Credits
Writer(s): Thamarai Kavignar, Darbuka Siva
Lyrics powered by www.musixmatch.com

Link