Yenthan Vanamum, Pt. 2

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே

எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும்
வழியில் வருகிறேனே

உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி ஓ-ஓ-ஓ-ஓ

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே

நீ நடக்கும் போது உன் நிழலும்
மண்ணில் விழும் முன்னே ஏந்திக் கொள்வேன்
உன் காதலின் ஆழம் கண்டு
கண்கள் கலங்குதே

உன்னுடய கால் தடத்தை மழை அழித்தால்
குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன்
ஹ்ம் உன்னால் இன்று பெண்ணானதன்
அர்த்தம் புரிந்ததே

உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி ஓ-ஓ-ஓ-ஓ

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே

எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும்
வழியில் வருகிறேனே

ஒரே ஒரு வார்த்தையில் கவிதை என்றால்
உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும்
என் பெயரைதான் யாரும் கேட்டால்
உன் பேர் சொல்கிறேன்

ஒரே ஒரு உடலில் இரு இதயம்
காதல் என்னும் உலகத்தில்தான் இருக்கும்
நீயில்லையேல் நான் இல்லையே
நெஞ்சம் சொல்லுதே

உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி ஓ-ஓ-ஓ-ஓ

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே

எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும்
வழியில் வருகிறேனே



Credits
Writer(s): Yuvan Shankar Raja, N Muthu Kumaran
Lyrics powered by www.musixmatch.com

Link