Kadhalikka Ingu Neramillai

ஹா...
நேரம் இல்லை...
நேரம் இல்லையே...

காதலிக்க இங்கு நேரம் இல்லையே
நாளைக்கு நீ தொல்லை பண்ணு முல்லையே

முழு வாழ்வை ஒரு நாளில்
வாழத்தான் துடிக்காதே
குழலாலே அழகாய் நீ
இதயத்தைக் குடிக்காதே

காதலிக்க நேரம் காலம் இல்லையே(காலம் இல்லையே)
நாளை என்றே ஒன்று மண்ணில் இல்லையே

அலுவல்கள் நூறென்று புளுகல்கள் வேண்டாமே
தழுவல்கள் தீரும் முன் நழுவல்கள் வேண்டாமே

காதல் தித்திக்கும் தேனைப் போலத்தான்
கொஞ்சம் ருசித்தால் போதுமே

ஹா... ஆ...
காதல் நொடிகள் போதை போலத்தான்
தீரத் தீரத்தான் நீ வேண்டுமே

ஹே... ஏ...
உன் ஆசைத் தீயில் நான் உறங்கிப் போகிறேன்
உன்னோடு நாளும் வாழத்தானே சாகிறேன்
கொல்லாதே காதலியே...

நேரம் இல்லையே...
காதலிக்க நேரம் இல்லையே... நேரம் இல்லையே
காதலிக்க நேரம் இல்லையே...

காதலிக்க நேரம் காலம் இல்லையே
நாளை என்றே ஒன்று மண்ணில் இல்லையே

காதலிக்க இங்கு நேரம் இல்லையே
நாளைக்கு நீ தொல்லை பண்ணு முல்லையே



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link